திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் போட்ட கண்டிஷனால் விழி பிதுங்கி நிற்கும் வெங்கட் பிரபு.. தளபதி 68 முடிவதற்குள் ஒரு வழி ஆயிடுவாரு போல

Actor Vijay: விஜய் இப்போது லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்நிலையில் லியோ படத்தின் பிசினஸ் இப்போது எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது.

ரிலீசுக்கு முன்னரே கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் பிசினஸ் செய்யப்பட்டுள்ளது. வாரிசு படத்தில் விஜய் நடிக்கும் போது படத்தைப் பற்றிய நிறைய விஷயங்கள் கசிந்து விட்டது. அதுமட்டுமின்றி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.

Also Read : லியோ படத்தின் பிரச்சனைக்கு முடிவு கட்டிய விஜய்.. எல்லா பேப்பர்களையும் தூசி தட்டும் லோகேஷ்

இதனால் அப்போது விஜய் மிகுந்த அப்செட்டில் இருந்தார். அதன் பிறகு வாரிசு படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. ஆனால் லோகேஷை பொறுத்தவரையில் ஒரு சின்ன விஷயத்தை கூட கசிய விடமாட்டார். அதன்படி லியோ படத்தின் ஒவ்வொரு காட்சியும் தற்போது வரை சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது.

ஆனால் வெங்கட் பிரபுவை பொறுத்தவரையில் மிகவும் கலகலப்பான ஆள். அவருக்கென்று சுற்றி எப்போதுமே ஒரு கூட்டம் இருக்கும். மேலும் அப்போது அவர் படத்தை பற்றிய சில விஷயங்களை பகிர்ந்து கொள்வார். ஆனால் விஜய் தளபதி 68 படத்தை பற்றி எங்கேயும் வாயை திறக்க கூடாது என கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.

Also Read : தளபதி 68 படத்தின் கதை இதுதான்.. 2 நிமிட வீடியோவில் மொத்தத்தையும் காட்டிய வெங்கட் பிரபு

இந்த கண்டிஷனால் விழி பிதுங்கி நிற்கும் வெங்கட் பிரபு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறாராம். இதனால் தளபதி 68 படத்தின் ஸ்டோரி டிஸ்கஷன் கூட செய்யாமல் இருக்கிறாராம். ஏதாவது செய்தி வெளியாகிவிட்டால் தன்னுடைய தலை தான் உருளும் என்பதால் காதும் காதுமாய் செயல்படுகிறார்.

மேலும் வெங்கட் பிரபு பார்ட்டி, பப் என்று சுற்றுவதால் ஏதாவது வாயிலிருந்து உளறி விடுவாரோ என்ற பயமும் அவருக்கு இருக்கிறதாம். ஆகையால் தளபதி 68 படம் முடிவதற்குள் வெங்கட் பிரபு ஒரு வழியாக ஆகிவிடுவார் போல. இதனால் இப்போதிலிருந்து ஒவ்வொரு அடியையும் வெங்கட் பிரபு பார்த்து பார்த்து எடுத்து வைக்கிறார்.

Also Read : ராசி இல்ல என முத்திரை குத்தப்பட்ட 5 நடிகைகள்.. எல்லோரும் ஒதுக்கி வைக்கும் விஜய் பட நடிகை

Trending News