வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கஸ்டடி படத்தால் அசிங்கப்படும் வெங்கட் பிரபு.. மூன்று நாள் வசூலில் முடிவானது படத்தின் தோல்வி.!

வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா மற்றும் மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தற்போது வாண்டட் இயக்குனர்களில் ஒருவராக மாறி உள்ளார். அடுத்தடுத்து தமிழில் பெரிய நடிகருடன் கூட்டணி வைத்து இதுபோன்ற பல படங்களை வெற்றியாக கொடுப்பார் என்று எதிர்பார்த்தோம். அதே நேரத்தில் சில நடிகர்களும் இவருடைய படத்தில் நடிப்பதற்கு காத்து இருந்தார்கள். ஆனால் அதையெல்லாம் ஏமாற்றும் விதமாக தெலுங்கு பக்கம் போய்விட்டார்.

தமிழில் திறமையுடன் கூடிய எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் இவர்களை எல்லாம் தவிர்த்து தெலுங்கில் இயக்குனராக கால் பதித்தார். அந்த நேரத்தில் தமிழில் எப்படியாவது தன்னுடைய முத்திரையை பதிக்க வேண்டும் என்று மிக ஆசையுடன் நாகார்ஜுனன் மகனான நாக சைத்தன்யா இருந்தார். ஏனென்றால் இவரை போல வளர்ந்து வரும் நடிகரான அல்லு அர்ஜுன் , விஜய் தேவரகொண்டா இவர்களெல்லாம் தமிழில் நடித்ததால் தானும் வரவேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார்.

Also read: லாஜிக்கே இல்லாமல் உப்புமா கிண்டிய வெங்கட் பிரபு.. ப்ளூ சட்டையிடம் சிக்கி சின்னா பின்னமான கஸ்டடி

அப்பொழுதுதான் இவருடைய கனவை நினைவாக்கும் விதத்தில் வெங்கட் பிரபு உங்கள் கனவை நான் நிறைவேற்றுகிறேன் என்று சொல்லி கஸ்டடி படத்தை அவரை வைத்து எடுத்தார். அதன் பின் ஒவ்வொரு படப்பிடிப்பும் வேகவேகமாக ஆரம்பித்து அனைத்து படப்பிடிப்புகளும் முடித்து கடந்த மூன்று தினங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஆனால் இப்படத்தின் ட்ரெய்லர் பார்த்த பிறகு முடிவு என்னவாக இருக்கும் என்று ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது.

அதே மாதிரி தான் வெளியான மூன்று நாட்களில் மோசமான வசூலை பெற்று வருகிறது. தற்போது வரை 7.5 கோடி வசூலை எட்டி இருக்கிறது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் 30 கோடி, இதில் நாக சைத்தன்யாவுக்கு 10 கோடி மற்றும் வெங்கட் பிரபுவுக்கு 5 கோடி மீதமுள்ள 15 கோடியில் படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்கள்.

Also read: வெங்கட் பிரபு – நாக சைத்தன்யா கூட்டணி ஒர்க் அவுட் ஆனதா.? கஸ்டடி ட்விட்டர் விமர்சனம்

குறைந்தது போட்ட பணத்தையாவது எடுக்க முடியுமா என்று தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டு காத்துக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் அந்த அளவிற்கு படம் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். நாக சைத்தன்யாவின் கனவை நிறைவேற்ற நினைத்த வெங்கட பிரபுவுக்கு இனிமேல் தமிழில் கூட வாய்ப்புகள் வருமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுல வேற பார்ட் 2 எடுப்பேன் அதிலும் ஹீரோவாக நாக சைத்தன்யாவை தான் நடிக்க வைப்பேன் என்று கொஞ்சம் ஓவராக பேசினார்.

இப்பொழுது இவருடைய நிலைமையை பார்த்தால் தமிழில் மட்டுமல்ல தெலுங்கில் கூட இவருடன் கூட்டணி வைப்பது சந்தேகம் தான். இதற்கு பேசாம இங்கேயே எதையாவது கதையை வைத்து உருட்டி இருக்கலாம். வெற்றியோ தோல்வியோ இங்கே முடிந்திருக்கும். தேடிப்போய் அக்கட தேசத்திலும் அசிங்கப்பட்டு வந்திருக்கிறார்.

Also read: கதை கூட முக்கியமில்லை தம்பி தான் முக்கியம்.. பிரேம்ஜிக்குனு தனி கேரக்டர் வைத்த வெங்கட் பிரபுவின் 6 படங்கள்

Trending News