வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி தடுக்கிறாரே! லியோவால் வெங்கட் பிரபுவுக்கு ஏற்பட்ட தலைவலி

Director Venkat Prabhu: சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்கவில்லையே என்ற கதை தான் வெங்கட் பிரபுவுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் வெங்கட் பிரபு. நடுவில் தோல்வி படம் கொடுத்து வந்த நிலையில் மாநாடு படத்தின் மூலம் விட்ட மார்க்கெட்டை பிடித்துள்ளார்.

கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான கஸ்டடி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் வெங்கட் பிரபு அடுத்ததாக விஜய்யின் 68வது படத்தை இயக்க இருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

Also Read : வாயிலையே வடை சுடும் வெங்கட் பிரபு.. அப்சட்டில் இருக்கும் தளபதி-68 டீம்

இதனால் வெங்கட் பிரபுவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது 49 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நாளில் லியோ படத்தின் கிளிம்ஸ் வீடியோ மற்றும் தளபதி 68 படத்தின் டைட்டில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.

அதுமட்டுமின்றி விஜய்யின் அரசியல் நுழைவுக்கான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகாது என தகவல் வந்துள்ளது. அதாவது லியோ படத்தின் எதிர்பார்ப்பு சில மாதங்களாகவே அதிகமாக இருந்தது.

Also Read : வேற லெவலில் உருவாகும் தளபதி 68 ப்ரோமோஷன் வீடியோ.. பிக் பாஸ் பிரபலத்தை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வெங்கட் பிரபு

ஆனால் தளபதி 68 படத்தின் அறிவிப்பால் லியோ எதிர்பார்ப்பு சற்று குறைந்துள்ளது. இதனால் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் மற்றும் தளபதி 68 படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் இதுகுறித்து கலந்து பேசி உள்ளனர். ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியானால் இரண்டிற்குமே எதிர்பார்ப்பு குறைந்து விடும்.

ஆகையால் லியோ படம் வெளியாகும் வரை தளபதி 68 படத்தை பற்றிய எந்த அறிவிப்பையும் வெளியிட வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனராம். விஜய் வெங்கட் பிரபுவுக்கு வரம் கொடுத்த படத்தில் நடிக்க சம்மதித்தாலும் லியோ படத்தால் இப்போது அவருடைய படத்தின் அப்டேட் தாமதமாகிறது.

Also Read : பிரம்மாண்டத்தின் உச்சம் தொட்ட லோகேஷ்.. விஜய்க்கு நிகராக ஆட்டம் போட்ட ஹீரோயின்

Trending News