திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Vijay : GOAT-க்கு பூசணிக்காய் உடைக்க நாள் பார்த்த வெங்கட் பிரபு.. பயந்து கும்பிடு போட்டு ஓட தயாரான விஜய்

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் கோட் படம் இந்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற முதல் சிங்களான விசில் போடு பாடல் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

மேலும் மிக விரைவில் செகண்ட் சிங்கிள் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தில் முக்கால்வாசி காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இன்னும் சண்டைக் காட்சி மட்டும் மீதம் இருக்கிறது. வெளிநாட்டுகளில் படப்பிடிப்பு அனைத்தையும் முடித்துவிட்டார்.

சென்னை மெட்ரோ ரயிலில் 3 அல்லது 4 நாட்களில் பைட் சீன் மட்டும் படமாக்கப்பட உள்ளது. இப்போது விஜய் கோட் பட குழுவுக்கு கட்டளை போட்டிருக்கிறாராம். அதாவது இப்போதே சித்திரை வெயில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு இருக்கிறது.

கோட் படப்பிடிப்பில் தீவிரம் காட்டும் வெங்கட் பிரபு

இன்னும் சில நாட்களில் அக்னி வெயில் ஆரம்பிக்க இருக்கிறது. ஆகையால் மே பத்துக்குள் மொத்த படத்தின் சூட்டிங்கையும் முடித்துவிட வேண்டும் என விஜய் கூறியிருக்கிறாராம். இதற்காக வெங்கட் பிரபு தீவிரமாக செயல்பட்டு வருகிறாராம்.

கடுமையான வெயில் தொடங்குவதற்கு முன்னதாக படப்பிடிப்பை முடிக்க உள்ளனர். அதன்பிறகு பின்னணி வேலைகள் நடைபெற இருக்கிறது. மேலும் வருகின்ற ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தை பற்றிய அப்டேட் வெளியாக உள்ளது.

அடுத்ததாக விஜய்யின் அடுத்த படம் பற்றிய அப்டேட்டும் இதே நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விஜய்யின் சினிமா கேரியரின் கடைசி படம் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகத்தின் எதிர்பார்ப்பும் அந்தப் படத்தில் மேல் தான் இருக்கிறது.

Trending News