சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

விஜய்யின் பேச்சை மறுத்ததால் அவதிப்படும் வெங்கட் பிரபு.. சந்தோசத்தில் திக்குமுக்காடி வரும் அனிருத்

Vijay and Venkat Prabhu: விஜய் பெயர் கேட்டாலே சும்மா அதிருதில்லா என்று சொல்வதற்கு ஏற்ப இவரை சுற்றி பல விஷயங்கள் ஆர்ப்பரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் அரசியலில் முழுமையாக இறங்கப் போகிறார் என்ற தகவல் வெளிவந்ததிலிருந்து எங்கு திரும்பினாலும் இவருடைய புராணம் தான் ஒலித்து வருகிறது.

இந்த சமயத்தில் தளபதி நடித்திருக்கும் கோட் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் வெளிவந்த விசில் போடு பாடல் நாலா பக்கமும் சர்ச்சையாக வெடித்து வருகிறது. அதற்கு காரணம் அப்பாடலில் உள்ள வரிகள் தான்.

இதை பார்க்கும் பொழுது மறைமுகமாக விஜய் அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு பிரச்சாரம் செய்கிறார் என்று சொல்லப்பட்டது. இன்னொரு பக்கம் விஜய் மற்றும் யுவனின் காம்போவில் பல வருடங்களுக்குப் பின் வரக்கூடிய இந்த பாடலுக்கு ரசிகர்கள் ரொம்பவே அதிக எதிர்பார்ப்பை வைத்து காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவர்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்றும் விதமாக யுவனின் மியூசிக் அமைந்துவிட்டதாக பலரும் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள். பொதுவாக விஜய்யின் பாடல் ஒன்று ரிலீசாகிறது என்றால் அதற்கு ஏகப்பட்ட பார்வையாளர்கள் மற்றும் லைக்குகள் வந்து குவியும்.

அதை வைத்துப் பார்க்கும் பொழுது விசில் போடு பாடல் மிகவும் கம்மியாக தான் இருக்கிறது என்று ரசிகர்கள் யுவன் மீது கோபத்தில் இருக்கிறார்கள்.

தம்பிக்காக விஜய்யை அலட்சியம் செய்த வெங்கட் பிரபு

இதை எல்லாம் பார்த்த விஜய்யும், வெங்கட் பிரபு மீது ஆத்திரத்தில் இருக்கிறார். அதற்கு காரணம் இந்த படம் ஆரம்பிக்கும் பொழுது அனிருத்தை மியூசிக் டைரக்டராக போடலாம் என்று விஜய் சொல்லி இருக்கிறார். ஆனால் வெங்கட் பிரபு, விஜய் பேச்சை மறுத்துவிட்டு தம்பி யுவன் தான் வேண்டும் என்று அடம் பிடித்து இருக்கிறார்.

அதன்படி விஜய்யும் வேற வழி இல்லாமல் வெங்கட் பிரபு சொன்னதற்கு ஓகே சொல்லிவிட்டார். ஆனால் இப்பொழுது வெளிவந்த விசில் போடு பாடல் நெகட்டிவ் கருத்துக்களை பெற்று வருவதால் யுவன் மற்றும் வெங்கட் பிரபு மீது விஜய் கோபத்தில் இருக்கிறார். இன்னொரு பக்கம் அனிருத் இதையெல்லாம் பார்த்து சந்தோஷத்தில் திக்கு முக்காடி திகைத்து வருகிறார்.

காரணம் நாம் இல்லை என்றால் எந்த அளவிற்கு அவர்களுடைய நிலைமை இருக்கிறது என்று கண் கொண்டு பார்க்கிறார். அதே நேரத்தில் இந்த மாதிரி ஒரு நிலைமை வெங்கட் பிரபுவுக்கு மற்றும் யுவனுக்கும் தேவைதான் என்று சந்தோஷத்தில் ஆட்டம் போட்டு வருகிறார்.

Trending News