புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தளபதி 68-ல் விஜய்யின் தங்கையை லாக் செய்த வெங்கட் பிரபு.. ஆடிஷனில் ரிஜெக்டான 4 நடிகைகள் தெரியுமா?

Thalapathy 68 Movie Update: லியோ படத்திற்கு பிறகு விஜய் இப்போது தளபதி 68 படத்தில் இணைகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இதில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடிக்கின்றனர். அதில் விஜய்க்கு தங்கையாக செம ஸ்ட்ராங்கான கேரக்டர் ஒன்றும் இருக்கிறது.

இதில் விஜய் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தந்தையாக நடிக்கும் விஜய்க்கு இரண்டு பிள்ளைகள். விஜய் மற்றும் அவருடைய சகோதரி. இந்த சகோதரி கேரக்டரில் தான் இளம் நடிகை ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என வெங்கட் பிரபு ஆடிஷன் செய்திருக்கிறார். அதில் ஐந்து நடிகைகளை ஆடிஷன் செய்து ஒருத்தரை மட்டும் தேர்வு செய்து நான்கு பேரை ரிஜெக்ட் செய்துவிட்டார்.

ஒரு சில படங்களை மட்டுமே நடித்திருந்தாலும் ஷங்கரின் மகளாக அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகை அதிதி சங்கர். இவர் விஜய்க்கு தங்கையாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். அவரை ஆடிஷன் செய்த வெங்கட் பிரபு இவர் இந்த கேரக்டருக்கு செட் ஆக மாட்டார் என ரிஜெக்ட் செய்துவிட்டார். அவரை தொடர்ந்து ஜெய்பீம் படப் புகழ் லிஜோமோல் ஜோஸ் இந்த கேரக்டருக்கு ஓரளவு செட்டாகுவார் என்று அவரையும் ஆடிஷனுக்கு வரவழைத்தனர்.

ஆனால் வெங்கட் பிரபு மனதில் நினைத்த கேரக்டருக்கு இவர் செட் ஆகல. அதன் தொடர்ச்சியாக கயல் ஆனந்தி, ரித்து வர்மா போன்றோரும் தளபதி 68 படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிப்பதற்கான லிஸ்டில் இருந்தார்கள். அவர்களும் ரிஜெக்டான பிறகு கடைசியாக லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நடித்து இளசுகளை கவர்ந்த இவானா இதற்கு செட்டாகுவார் என வெங்கட் பிரபு அவரை செலக்ட் செய்து இருக்கிறார்.

ஏனென்றால் நடந்த ஆடிஷனில் மற்ற நான்கு நடிகைகளை காட்டிலும் இவானா ரியாக்ஷன், ஆக்டிங் எல்லாம் வெங்கட் பிரபு மனதில் சித்தரித்து வைத்திருந்த கேரக்டருக்கு மேட்ச் ஆனது. விஜய் உடன் இவானா காமினேஷன் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு தளபதி ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

ஏனென்றால் நிஜ வாழ்க்கையில் தன்னுடைய தங்கையை இழந்த விஜய், படத்தில் வரும் சகோதரிகளுடன் என்ஜாய் பண்ணி நடிப்பார், அவர்களது சென்டிமென்ட்டும் பக்காவாக ஒர்க் அவுட் ஆகும். வேலாயுதம், திருப்பாச்சி, கடைசியாக வந்த லியோ போன்ற படங்களில் தளபதியின் சிஸ்டர் சென்டிமென்ட் ரசிகர்களை உருக வைத்து விடும். தளபதி 68லும் விஜய்- இவானா காம்போ பக்காவாக ஒர்க் அவுட் ஆகப் போகிறது.

Trending News