தமிழ் சினிமா வில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே காமெடி கதையை மையமாகக் கொண்டுதான் இருக்கும். அதற்கு காரணம் ரசிகர்கள் வெங்கட் பிரபுவிடம் எதிர்பார்ப்பது காமெடி கலந்த கதை தான் இதனை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான படங்கள் எதுவுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை உதாரணத்திற்கு மாஸ் மற்றும் பிரியாணி 2 படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தன. இதனால் வெங்கட்பிரபு அடுத்ததாக இயக்கும் படத்தின் கதையில் முழு கவனத்தை செலுத்தி மாநாடு எனும் படத்தை சிம்புவை வைத்து இயக்கி இருந்தார்.
இப்படம் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் வரவேற்பை பெற்று. தற்போது சிம்புவின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு மாநாடு படத்திற்கு தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவு இருந்து வருகின்றன. அதனால் வெங்கட்பிரபு அடுத்த படத்தின் மீதான கவனத்தை செலுத்தி உள்ளார்.
அதாவது வெங்கட் பிரபு அடுத்ததாக அட்லட் காமெடியை வைத்து படத்தை இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு கதாநாயகனாக அசோக் செல்வன் நடிக்க இருப்பதாகவும், சுருதி வெங்கட், கோமாளி பட புகழ் சம்யுக்த மேனன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்க இருப்பதாக கூறிவருகின்றனர்.
இதனைக் கேள்விப்பட்ட திரை பிரபலங்கள் பலரும் தற்போது தான மாநாடு எனும் வெற்றி படத்தை கொடுத்துவிட்டார். அதுக்குள்ள ஏன் இந்த திடீர் மாற்றம் என கேட்டு வருகின்றனர். ஆனால் வெங்கட்பிரபுக்கு அனைத்து விதமான கதைகளை எடுக்க வேண்டும் என்பதால் இப்படத்தையும் இயக்குவதாக சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறிவருகின்றனர்.