வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பிட்டு படத்துக்கே டப் கொடுக்க போகும் வெங்கட் பிரபு.. மன்மதலீலை படம் முழுவதும் இதுதானாம்

இளம் நடிகர்களை வைத்து கலகலப்பான திரைப்படத்தை எடுத்து அதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. ஒரு நடிகராக அவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவரின் இயக்கத்தில் வெளியான சென்னை 28 திரைப்படம் தான் அவருக்கு அதிக ரசிகர்களை கொடுத்தது.

அதற்கு அடுத்து ஏராளமான படங்களை இயக்கியுள்ள இவர் சமீபத்தில் மாநாடு என்ற திரைப்படத்தை இயக்கினார். சிம்பு, எஸ்ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம் பல கோடி அளவில் வசூல் சாதனை படைத்தது.

இதுவரை அவர் காமெடி, கிளாமர் என்று அனைத்தும் கலந்த திரைப்படங்களை மட்டுமே இயக்கி வந்தார். ஆனால் மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மதிப்பு சற்று அதிகமாக இருக்கிறது. இதனால் அதற்கு ஏற்றவாறு படங்களை இயக்கும் நிலையில் வெங்கட் பிரபு இருக்கிறார்.

தற்போது இவரின் இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் மன்மதலீலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இந்த திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் படத்தை பாதியிலேயே நிறுத்தி வைத்திருந்த இயக்குனர் தற்போது அதை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னால் ஏற்படும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் இரட்டை வசனங்கள், 18 பிளஸ் காட்சிகள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறதாம். இதற்கு முன்பு வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த கோவா திரைப்படத்திலும் இது போன்ற பல சர்ச்சையான காட்சிகள் இடம் பெற்றது.

தற்போது மீண்டும் அதே பாணியில் மன்மதலீலை திரைப்படமும் உருவாகியிருக்கிறது. மாநாடு திரைப்படத்தைப் பார்த்து வெங்கட் பிரபுவை கொண்டாடும் ரசிகர்கள் இந்த மன்மத லீலை திரைப்படத்தை ஏற்பது சற்று கஷ்டம் தான்.

இருப்பினும் பல வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் வெங்கட் பிரபுவுக்கு வேறு வழியில்லை. இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் மீண்டும் மாநாடு போன்ற வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்ட திரைப்படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News