சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

விஜய் போட்ட கண்டிஷன்.. கண்டுக்காமல் வெங்கட் பிரபு செய்யும் சேட்டை

Thalapathy 68-Vijay-Venkat Prabhu: லியோவை முடித்த கையோடு விஜய் தளபதி 68ல் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். நேற்று இப்படத்தின் பூஜை குறித்த வீடியோ வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஏற்கனவே இது நடைபெற்று சூட்டிங் ஆரம்பித்த நிலையில் திடீரென படகுழு சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்து ரசிகர்களை திக்கு முக்காட செய்தது.

அந்த வகையில் இப்போது சோசியல் மீடியா முழுவதும் தளபதி 68ன் ஆதிக்கம் தான் நிறைந்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் படத்தில் இணைந்துள்ள மாஸ் பிரபலங்கள் தான். முதலிலேயே இது குறித்த செய்திகள் வெளிவந்திருந்தாலும் தற்போது அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு தரப்பு அறிவித்திருப்பது படத்தின் மீதான ஆர்வத்தையும் தூண்டி இருக்கிறது.

அதன்படி பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திரங்களோடு வெங்கட் பிரபுவின் சென்னை 28 குரூப்பும் இணைந்துள்ளனர். அதில் வழக்கம் போல பிரேம்ஜி இடம்பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோரும் இணைந்துள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள் வெங்கட் பிரபு விஜய்க்கே விபூதி அடித்துவிட்டார் என கலாய்த்து வருகின்றனர்.

ஏனென்றால் அவருடைய இந்த சென்னை 28 கேங் சுருக்கமாக பார்ட்டி கேங் என்றும் கூறப்படுவதுண்டு. அந்த அளவுக்கு சூட்டிங் ஸ்பாட்டையே பிக்னிக்காக மாற்றி இவர்கள் ஜாலி பண்ணி வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதனாலேயே விஜய் அவர்கள் எல்லாம் படத்தில் நுழையக்கூடாது என்று கண்டிஷன் போட்டதாக ஒரு தகவல் தீயாக பரவியது.

ஆனால் இப்போது அவர்களும் படத்தில் இருப்பதை பார்த்தால் வெங்கட் பிரபு விஜய் பேச்சை கேட்காமல் என்ன சேட்டை செய்து சம்மதிக்க வைத்தாரோ என்ற கேள்வி தான் எழுகிறது. இதை ப்ளூ சட்டை மாறன் கூட தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை போட்டு கிண்டல் செய்து இருக்கிறார். ஆனாலும் இது எதிர்பார்த்தது தான்.

அந்த வகையில் லியோவில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்த நிலையில் அதையே ஓவர் டேக் செய்யும் வகையில் தளபதி 68 ஆரம்பமே அதகளமாக இருக்கிறது. இதில் மைக் மோகன் தன்னுடைய பாலிசியை விட்டுக் கொடுத்து விஜய்க்காக களம் இறங்கி இருப்பதும் நிச்சயம் வேற லெவல் சர்ப்ரைஸ் தான். ஆக மொத்தம் இந்த கூட்டணி தரமான ஒரு வெற்றிக்கு தயாராகி வருகிறது.

Trending News