வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அயலானுக்கு போட்டியா இல்ல அவதாருக்கு போட்டியா.? வெங்கட் பிரபு சொன்ன தளபதி-68 சீக்ரெட்

கடந்த பல மாதங்களாகவே லியோ திரைப்படத்தை பற்றிய பேச்சு தான் சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருந்தது. ஆனால் இப்போது அதையே ஓரம் கட்டும் அளவுக்கு தளபதி 68 தகவல்கள் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது. அதிலும் வெங்கட் பிரபு முதல்முறையாக விஜய்யை இயக்க இருப்பது ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தற்போது கஸ்டடி திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கும் வெங்கட் பிரபு அடுத்ததாக விஜய்யுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார். கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. அதிலும் இப்படத்திற்காக விஜய்க்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டிருப்பது பெரும் வியப்பாக இருக்கிறது.

Also read: தளபதியின் காலை வாரிவிட்ட 5 சொதப்பலான இயக்குனர்கள்.. சூனியமாக மாறிய வருடம்

இது ஒரு புறம் இருக்க இது என்ன பிரமாதம் இதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு என்ற ரீதியில் தற்போது வெளிவந்துள்ள தகவல் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது. அதாவது தளபதி 68 வித்தியாசமான கதைக்களத்தை கொண்டதாக இருக்குமாம். ஏற்கனவே ஒருமுறை வெங்கட் பிரபு, விஜய்யுடன் இணையும் பட்சத்தில் படத்தின் கதை இப்படித் தான் இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

எப்படி என்றால் ஏலியன் சம்பந்தப்பட்ட ஒரு கதையாக தான் இப்படம் இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். அதாவது ஏலியன் விஜய்யை கடத்திச் சென்று தங்கள் கிரகத்திற்குள் வைத்திருந்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். இது நிச்சயம் ஆடியன்ஸை உற்சாகமடைய வைக்கும் என அவர் கூறியிருந்தார்.

Also read: நம்பர் ஒன் இடத்தை அசால்ட்டாக தட்டி தூக்கிய விஜய்.. பாலிவுட்டை மிரள வைக்கும் தளபதி-68 சம்பளம்

உண்மையில் இது கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கிறது. அதிலும் விஜய், ஏலியன் காம்போ நிச்சயம் வேற லெவலில் இருக்கும். அந்த வகையில் இப்படம் அவதாருக்கு போட்டியா இல்ல அயலானுக்கு போட்டியா என்ற கேள்வி தான் இப்போது எழுந்துள்ளது. ஏனென்றால் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் இப்படி ஒரு கதை களத்துடன் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வரும் தீபாவளியை முன்னிட்டு வெளிவரும் இப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது. அதே போன்று சமீபத்தில் வெளிவந்து வசூல் சாதனை படைத்த அவதார் 2 படமும் உலக அளவில் கவனம் பெற்றது. இப்படி ரசிகர்கள் ஃபேண்டஸி கதையை விரும்பி பார்க்கும் இந்த சூழ்நிலையில் விஜய் அப்படி ஒரு படத்தில் நடித்தால் நிச்சயம் அது வரவேற்பு பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also read: விஜய்க்கு மட்டும் ஒர்க் அவுட் ஆன காஷ்மீர் ட்ரிப்.. புது பிரச்சனையால் நொந்து போன சிவகார்த்திகேயன்

Trending News