GOAT: தளபதி விஜய் நடித்த கோட் படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. விஜய் ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸ் போல கொண்டாட இருக்கிறார்கள். ஒருவழியாக தமிழக அரசு கோட் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து விட்டது. நாளை காலை 9 மணிக்கு கோட் படத்தின் சிறப்பு காட்சி ரிலீஸ் ஆக இருக்கிறது.
விஜய் இதுவரை தான் நடிக்காத கதை களத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படம் தொழில்நுட்ப அளவில் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கிறாரா என்று முதலில் எல்லோருக்குமே ஒரு சந்தேகம் இருந்தது. தற்போது அட இந்த கூட்டணி ஒரு படத்தை முடிச்சு ரிலீஸ் வர வந்துட்டாங்களே என எல்லோருமே ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
உனக்காக தான் இந்த விஷயத்தை பண்றேன்
அதுவும் பிரேம்ஜி, வைபவ் போன்ற மஜாவான கூட்டத்துடன் தளபதி பயணித்திருக்கிறார். சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவாவை மீண்டும் ஸ்கிரீனில் பார்க்க தமிழ் சினிமா ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் ரஜினி, விஜய் போன்ற டாப் நடிகர்கள் எல்லாம் படத்திற்காக தங்களுடைய தோற்றத்தில் மெனக்கிட மாட்டார்கள்.
கமலஹாசன், அஜித், சூர்யா, விக்ரம் போன்றவர்கள் தான் ஒவ்வொரு படத்திற்கும் பெரிய அளவில் தங்கள் தோற்றத்தில் மாற்றத்தை கொண்டு வருவார்கள். பெரும்பாலும் விஜய் அவருடைய படத்தில் ஹேர் ஸ்டைல் மாற்றுவது தான் நிகழ்ந்திருக்கிறது.
அதிலும் கடைசியாக சில வருடங்களாக விஜய் லேசான தாடியுடன் தான் படங்களில் நடிக்கிறார். பொதுவெளியிலும் தாடியுடன் தான் வலம் வருகிறார். ஆனால் கோட் படத்தை பொருத்தவரைக்கும் அவருடைய முகத்தை ஸ்கேன் செய்ய கிளீன் ஷேவ் பண்ண வேண்டும் என சொல்லி விட்டார்களாம்.
இதை வெங்கட் பிரபு விஜய்யிடம் சொன்னபோது, விஜய் அவரிடம் வாழ்க்கையில் முதல்முறையாக உனக்காக நான் இதை செய்கிறேன் என சொல்லி இருக்கிறார். இந்த சுவாரஸ்யமான தகவலை வெங்கட் பிரபு தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
கோட் படத்திலிருந்து வெளியான கடைசி அப்டேட்
- வெங்கட் பிரபு செய்யும் தில்லாலங்கடி வேலை
- வாயை பிளக்க வைத்த GOAT டிஜிட்டல், தியேட்டர் உரிமை விற்பனை
- GOAT படத்தின் விஜயகாந்த் காட்சியை பார்த்து மிரண்ட ரஜினி