புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிகில் பட பாமுர்லாவை கையிலெடுக்கும் வெங்கட்பிரபு.. தளபதி 68 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இதுதானாம்

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் இப்படத்தின் ரிலீசுக்காக படக்குழு ஆயத்தமாகி வருகிறது. இதனிடையே நடிகர் விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படத்தின் அப்டேட் இணையத்தில் அவ்வப்போது கசிந்து வருகிறது. ஏ.ஜி.எஸ்.என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கவுள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தை அதகளப்படுத்திய நிலையில், படத்தின் மற்ற நடிகர், நடிகைகளுக்கான தேர்வு தற்போது நடந்து வருகிறது. அந்த வகையில் இப்படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதால், நடிகைகளான ஜோதிகா மற்றும் பிரியங்கா அருள்மோகன் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: இயக்குனர் ஆகி அப்பாவுக்கே ஷாக் கொடுத்த ஜேசன் சஞ்சய்.. ஆனாலும் விஜய் ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல

மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதைக்களத்தில் நடிப்பார் என வெங்கட் பிரபு கூறிய நிலையில், பிகில் படத்தின் பார்முலாவை இப்படத்தில் வெங்கட் பிரபு பயன்படுத்த உள்ளாராம். கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த படம் தான் பிகில். கால்பந்தாட்டம், பெண்களின் வலிமை என வெளியான இப்படத்தின் கதைக்களம் ரசிகர்களை கொண்டாட வைத்தது.

அந்த வகையில் இப்படத்தில் விஜய், ராயப்பன் என்ற கதாபாத்திரத்திலும், மைக்கேல் பிகில் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். அதிலும் ராயப்பனாக விஜய் நடித்த கதாபாத்திரம் இப்படத்தில் 20 நிமிடங்கள் மட்டுமே வந்திருந்தாலும் ரசிகர்களுக்கு விருப்பமான கதாபாத்திரமாக மாறியிருக்கும். அதுவும் இப்படத்தில் அப்பா,மகன் பாசத்தை பார்க்கும்போது நம் கண்களை கலங்கவைத்தது என்றே சொல்லலாம்.

Also Read: ரஜினி, விஜய் ரசிகர்களை குதூகல படுத்திய ஷாருக்கான்.. ஜவான் மேடையை தெறிக்க விட்ட சூப்பர் ஸ்டார்

அந்த வகையில் இயக்குனர் வெங்கட்பிரபு ஆரம்பத்தில் தளபதி68 படத்தில் அண்ணன், தம்பி கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக கூறினார். ஆனால் தற்போது பிகில் படம் போலவே இப்பபடத்திலும் அப்பா,மகன் கதாபத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் பல காட்சிகள் தீவில் தான் படமாக்கபடவுள்ளதாக தளபதி68 படக்குழு கூறி வருகின்றனர்.

தற்போது நடிகர் விஜய், லியோ படத்தின் ரிலீசுக்கு காத்துக்கொண்டிருக்கும் நிலையில், தளபதி 68 படத்தின் அப்டேட்டுகளை பெரிய அளவு வெளியில் கசியாதவாறு வெங்கட் பிரபுவுக்கு உத்தரவிட்டுள்ளார். இருந்தாலும் இப்படத்தின் சிறு,சிறு அப்டேட்டுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், லியோ ரிலீஸானவுடன் தளபதி68 படத்தில் விஜய் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

Also Read: ஜோதிகா எல்லாம் வேண்டாம், 28 வயது நடிகையை புக் செய்த வெங்கட் பிரபு.. தளபதி 68ல் இணைந்த ஹீரோயின்

Trending News