திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யின் கண்டிஷனால் நொந்து போன வெங்கட் பிரபு.. மொத்த கனவையும் இப்படி சல்லி சல்லியா உடைச்சிட்டீங்களே!

வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த கஸ்டடி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை வைத்து அங்கு தனக்கென ஒரு இடத்தை பிடிக்க நினைத்த அவர் இப்போது மீண்டும் தமிழுக்கே திரும்பும் அளவுக்கு படத்தின் வசூல் சரிவை சந்தித்திருக்கிறது.

இந்நிலையில் வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைய இருக்கிறார் என்ற செய்தி தான் இப்போது மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் அவர் அட்லீ உட்பட சில இயக்குனர்களிடம் அடுத்த படம் குறித்து விவாதித்து வந்தார்.

Also read: கஸ்டடி படத்தால் அசிங்கப்படும் வெங்கட் பிரபு.. மூன்று நாள் வசூலில் முடிவானது படத்தின் தோல்வி.!

ஆனால் இப்போது வெங்கட் பிரபு தான் விஜய்யை இயக்கப் போகிறார் என உறுதிப்பட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது பல வருடங்களுக்கு முன்பே பேசப்பட்ட கூட்டணி ஆகும். எப்படி என்றால் வெங்கட் பிரபு அஜித்தை வைத்து மங்காத்தா என்னும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கடந்த 2011 ஆம் ஆண்டு கொடுத்தார்.

அப்போதே விஜய் அவரை தன் வீட்டிற்கு வரவழைத்து மனதார பாராட்டி இருக்கிறார். மேலும் அர்ஜுன் கதாபாத்திரத்திற்கு என்னை நடிக்க கூப்பிட்டு இருக்கலாமே என்று சாதாரணமாக கேட்டது வெங்கட் பிரபுவை கடும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது. அப்போதுதான் விரைவில் நாம் இணையலாம் என்ற வாக்குறுதியையும் விஜய் கொடுத்திருக்கிறார். ஆனால் அதற்கு அவர் ஒரு முக்கியமான கண்டிஷனை போட்டிருக்கிறார்.

Also read: எடுபடாத வெங்கட் பிரபுவின் கஸ்டடி.. அதிர்ச்சியை கிளப்பிய முதல் நாள் வசூல்

அந்த விஷயம் தான் வெங்கட் பிரபுவின் மனசை சுக்குநூறாக உடைத்திருக்கிறது. என்னவென்றால் நாம் இணையும் படத்தில் பிரேம்ஜி மட்டும் நடிக்க கூடாது. அது உன் பொறுப்பு தான், பார்த்துக்கோ என்று சிரித்தபடி ஜாலியாக கூறினாராம். ஏனென்றால் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பதற்கு ஏற்ப வெங்கட் பிரபு கதையில்லாமல் கூட படம் எடுத்து விடுவார், ஆனால் தம்பி இல்லாமல் படம் எடுக்கவே மாட்டார்.

அந்த அளவுக்கு அவர் தன் தம்பியை முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்து விடுவார். அதைத்தான் விஜய் இப்படி ஜாலியாக கூறியிருக்கிறார். இருந்தாலும் விஜய் கூறியதற்கு வெங்கட் பிரபு என்ன முடிவெடுப்பார் என்று தெரியவில்லை. அந்த வகையில் அடுத்ததாக இணைய போகும் இவர்களின் கூட்டணியில் பிரேம்ஜி இருப்பாரா, மாட்டாரா என்ற ஒரு சந்தேகம் இப்போது அனைவருக்கும் எழுந்துள்ளது.

Also read: லாஜிக்கே இல்லாமல் உப்புமா கிண்டிய வெங்கட் பிரபு.. ப்ளூ சட்டையிடம் சிக்கி சின்னா பின்னமான கஸ்டடி

Trending News