மாநாடு திரைப்படத்தின் வெற்றியால் வெங்கட்பிரபு தற்போது திரையுலகில் முன்னணி இயக்குனராக மாறியுள்ளார். சிம்பு, எஸ் ஜே சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியான மாநாடு திரைப்படம் வரலாறு காணாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அந்தத் திரைப்படத்தை தற்போது வெங்கட்பிரபு தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார். அதில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் வெங்கட்பிரபு ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் அஜித் பற்றி கூறியிருக்கிறார். அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில்அஜித், அர்ஜுன், திரிஷா ஆகியோர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் மங்காத்தா என்ற திரைப்படம் வெளிவந்தது.
அஜித்தின் 50வது திரைப்படமாக வெளிவந்த அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் லாபம் பார்த்தது. அதில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்த அஜித்தின் நடிப்பு ரசிகர்களை கொண்டாட வைத்தது. அந்த சமயத்தில் வெங்கட்பிரபு அஜித்தை வைத்து படம் இயக்குகிறார் என்று தெரிந்ததும் பலரும் அவரை விமர்சித்திருக்கிறார்கள்.
தன்னுடைய ஐம்பதாவது படத்தை அஜித் எதற்காக வெங்கட்பிரபுவுக்கு கொடுத்தார் என்றும், அவர் இந்த படத்தில் நடிப்பதற்கு பதிலாக பைக் ரேஸ் போகலாம் என்று பலரும் நெகட்டிவாக பேசியதாக வெங்கட்பிரபு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் யாருக்கும் நான் அஜித்தை வைத்து படம் இயக்குவது பிடிக்கவில்லை. அதனால் என்னை சுற்றி அப்போது பல விமர்சனங்கள் வந்து என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. எப்படியும் இந்த முயற்சியில் நான் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்று முடிவு செய்துதான் அந்த படத்தை இயக்கினேன்.
படமும் வெளிவந்து மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது என்று தன்னைப் பற்றி வந்த அந்த கருத்துக்கள் குறித்து வெங்கட்பிரபு வருத்தத்துடன் பேசியுள்ளார்