திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

விஜய்க்காக ரூட்டை மாற்றிய வெங்கட் பிரபு.. புது முயற்சியில் உருவாக்கும் தளபதி 68

Director Venkat Prabhu: சென்னை 600028 என்னும் படத்தின் மூலம் இயக்கத்தை தொடங்கியவர் வெங்கட் பிரபு. எதார்த்தமான கதையை வம்சம் கொண்டு இவர் இயக்கிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் இவர் விஜய்யை வைத்து உருவாக்கும் படத்தில் மேற்கொள்ளும் செயல்கள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இவரின் படமான கஸ்டடி, படும் தோல்வியை சந்தித்த நிலையில், இவரின் ஒன்லைன் ஸ்டோரிக்கு ஓகே சொன்ன விஜய்யை வைத்து மேற்கொள்ளும் படம் தான் தளபதி 68. பொதுவாக இவரின் படங்கள் என்றாலே தனி சாயல் மேலும் அவருக்கென்று ஒரு பட்டாளம் வைத்திருப்பார்.

Also Read: அஜித்துடன் நடிக்க வந்த வாய்ப்புகளை தூக்கி எறிந்த நடிகை.. நயன்தாரா இடத்தை பிடிக்க இப்படி ஒரு தந்திரமா.!

அவ்வாறு எத்தனை படம் பண்ணாலும், தன்னிடம் பணி புரிந்தவர்களை மாற்றாமல் அவர்களை வைத்துதான் படம் பண்ணுவார். இதுபோன்ற கொள்கையில் இருந்த இவர் தற்போது விஜய்க்காக தன் முடிவை மாற்றிக்கொள்ள போகிறாராம்.

அதை தொடர்ந்து இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களை மாற்றப் போவதில்லை. இப்படத்தில் பிரேம்ஜி, ஜெய் என அவருக்கு பிடித்த நடிகர்கள் கண்டிப்பாக இடம் பெறுவார்கள். ஆனால் தனது படத்தின் டெக்னீசியன்களை இம்முறை மாற்ற முடிவு எடுத்துள்ளாராம்.

Also Read: 73 வயதில் ரஜினிக்கு ஆக்சன் தேவையா.. ஜெயிலர் படமும் ஊத்திக்குமுன்னு சாபமிட்ட பிரபலம்

அப்படி பார்த்தால் இவர் இசையமைப்பாளர்களை தவிர கேமராமேன், எடிட்டிங் என முக்கியமான துறைகளில் உள்ளவர்களை மாற்ற உள்ளாராம். இதனால் இனி மேல் இவர் படங்கள் புது விதமாக இருக்க தற்போது புது யுத்தியை கையாண்டு வருகிறார்.

இவரின் இத்தகைய மாற்றம் புதிதாக பேசப்பட்டாலும், இது அவரே எடுத்த முடிவு என கூற முடியாது. இந்தப் படத்தில் விஜய் நடிப்பதாலும், விஜய்யின் சொல்லுக்கு இணங்க தான் இது போன்ற மாற்றங்களை செய்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, இவர் படங்களில் முக்கியமாக பார்க்கப்படும் காமெடி இருக்குமா இருக்காதா என்ற கேள்வியும் தற்பொழுது ரசிகர்களிடையே எழ ஆரம்பித்து விட்டது.

Also Read: சிவகார்த்திகேயனால் கைவிடப்பட்ட இயக்குனர்.. கால்ஷீட் கொடுத்து லாக் செய்த ஆர்ஜே பாலாஜி

Trending News