ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அஜர்பைஜான் சென்றதற்கான காரணம்.? கோட் சஸ்பென்சை உடைத்த வெங்கட் பிரபு

Venkat Prabhu: வெங்கட் பிரபு மற்றும் விஜய் மாஸ் கூட்டணியில் கோட் படம் உருவாகி இருக்கிறது. எப்போதுமே விஜய்யின் படங்களுக்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு ஏற்பாடு செய்து வந்த நிலையில் கோட் படத்திற்கு அவ்வாறு செய்யவில்லை. இதனால் வெங்கட் பிரபு பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் கோட் படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்கள் உள்ள நிலையில் படம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. பல சஸ்பென்ஸ்களை வெங்கட் பிரபு வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஆரம்பம் முதலே அஜித்தை பற்றி நிறைய விஷயங்கள் வெங்கட் பிரபு கூறியிருந்தார்.

அஜித்துக்கு மரண மாஸான பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை வெங்கட் பிரபு தான் கொடுத்தார். இந்நிலையில் மங்காத்தா படப்பிடிப்பு நேரத்தில் விஜய் மற்றும் அஜித் வெங்கட் பிரபுவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்டு புகைப்படம் வைரலானது. இந்நிலையில் கோட் படப்பிடிப்பு சமயத்தில் திடீரென வெங்கட் பிரபு அஜர்பைஜான் சென்று வந்தார்.

கோட் படத்தின் சஸ்பென்ஸை சொன்ன வெங்கட் பிரபு

இதனால் அப்போதே கோட் படத்தில் அஜித்தின் காட்சிகள் இடம் பெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது. இப்போது அதற்கான சஸ்பென்சை வெங்கட் பிரபு வெளியிட்டிருக்கிறார். அதாவது கோட் படத்தில் அஜித்தை குறிப்பிடும்படி காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம்.

அதில் அவரது காட்சி அல்லது அவரது குரல் எது வேண்டுமானாலும் இடம்பெறலாம். என்னவென்று இப்போது என்னால் அந்த சஸ்பென்சை கூற முடியாது என்று வெங்கட் பிரபு கூறி இருக்கிறார். விஜய் படத்தில் அஜித் இடம் பெறுவது இப்போது ரசிகர்களை குஷியாக்கி இருக்கிறது.

அதேபோல் ரசிகர்களுக்கு இன்னொரு ட்ரீட் என்னவென்றால் குட் பேட் அக்லி படத்தில் விஜய் சில காட்சிகளில் வருவார் என்று சொல்லப்படுகிறது. போட்டி நடிகர்களாக பார்க்கப்படும் இவர்கள் இருவரும் இவ்வாறு நட்புடன் இருப்பது மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம்.

சூடுபிடிக்கும் கோட் ப்ரோமோஷன்

Trending News