திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

போட்ட காசை எடுப்போமான்னு தெரியல இதுல அடுத்த பார்ட் வேறயா.? இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படும் வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு சென்னை 28 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  பொதுவாக இவர் இயக்கும் படங்கள் காமெடி கலந்த ஒரு என்டர்டைன்மென்ட் படங்களாக இருக்கும். அத்துடன் இவரது படங்களும் ஆஹா ஓஹோ என்று சொல்ல முடியாத அளவிற்கு இருந்தாலும் சுமாரான வரவேற்பை பெற்று வந்தார். அதன் பின் அஜித் நடிப்பில் இவர் இயக்கிய மங்காத்தா படத்திற்கு பிறகு எல்லாருடைய கவனமும் இவர் பக்கம் திசை திரும்பியது.

அந்த அளவிற்கு அஜித்திற்கும் இவருக்கும் சினிமா கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக மங்காத்தா படம் அமைந்தது. அடுத்ததாக கார்த்திக் நடிப்பில் பிரியாணி மற்றும் சூர்யா நடிப்பில் மாஸ் என்கிற மாசிலாமணி படத்தை இயக்கினார். அந்தப் படங்கள் என்னதான் வெற்றி பெற்றாலும் ஒரு சூப்பர் ஹிட் படம் என்று சொல்லும் அளவிற்கு இல்லை. இந்நிலையில் இவருடைய வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக சிம்புவை வைத்து எடுத்த படம் தான் மாநாடு.

Also read: சேரும் சகதியுமாக வந்த அஜித்.. யார், என்னனு தெரியாமல் அவமானப்படுத்தி அடாவடி செய்த ஹோட்டல் நிர்வாகம்

இப்படம் மாபெரும் பிரம்மாண்ட படமாக அமைந்தது. அத்துடன் துவண்டு போயிருந்த சிம்புவுக்கும் கை கொடுத்து தூக்கி விட்ட படமாக வெற்றியை கொடுத்தது. இப்படி தொடர்ந்து இனிமேல் தமிழில் இது போன்ற பிரம்மாண்ட படங்களை எடுப்பார் என்று எதிர்பார்த்து நிலையில் இவருடைய படங்களில் நமக்கு ஏதாவது சான்ஸ் வரும் என்று நம்பி இருந்த தமிழ் நடிகர்களை ஏமாற்றும் விதமாக இவருடைய செயல் தற்போது இருக்கிறது.

திடீரென்று தெலுங்கு பக்கம் சென்று அங்கே நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை எடுத்திருக்கிறார். இதுதான் இவர் தெலுங்கில் இயக்கிய முதல் படம். இப்ப படம் வருகிற மே 12ஆம் தேதி வெளிவர இருக்கிறது. அதற்காக இப்பட பிரமோஷனில் வெங்கட் பிரபு பேசியுள்ளார். அதில் இப்பொழுது எனக்கு தெலுங்கு தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் பேசுகிறேன்.

Also read: ஒரு தடவை உண்மைக்காக நின்னு பாரு உன் லைஃபே மாறும்.. வெங்கட் பிரபுவின் கஸ்டடி ஆட்டம் ஆரம்பம்

அடுத்து இப்படத்தை மறுபடியும் நாக சைதன்யாவை வைத்து பார்ட் 2 வை எடுப்பேன். அப்பொழுது நான் பேசும்போது தெலுங்கில் பேசுகிறேன் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே இவருடைய மாநாடு படத்தை பார்த்த பிறகு தமிழில் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு போன்ற முக்கிய கதாநாயகர்கள் கால்ஷீட் வெங்கட் பிரபுவுக்கு கொடுத்திருக்கிறார்கள். இப்படி இருக்கையில் தெலுங்கு பக்கம் சென்று மீண்டும் அங்கேயே படத்தை எடுப்பேன் என்று இவர் பேசியது கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது.

தமிழ் படங்களில் முக்கியத்துவம் கொடுக்காமல் அங்கே அடுத்தடுத்த படங்களை இயக்கப் போகிறார். இப்ப எடுத்த படத்திலேயே போட்ட காசை எடுப்போம் என்று தெரியவில்லை. இதுல அடுத்த பார்ட் 2 வேற. இதற்கெல்லாம் காரணம் இவர் கேட்கும் சம்பளம் அங்கே கிடைப்பதால் தான். இருக்கிறத விட்டு பறப்பதற்கு ஆசைப்படுகிறார் இதனுடைய விளைவு மறுபடியும் தமிழ் நடிகர்களை தேடி வரும்போது தெரியும்.

Also read: விடுதலையால் ஓரம் கட்டப்பட்ட பத்து தல.. சிம்புவுக்கு வெற்றியா, தோல்வியா? மொத்த ரிப்போர்ட்

Trending News