வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அரசியல் ஆசையில் காட்டும் ஓவர் பந்தா.. தளபதியால் தலை சுற்றி போன வெங்கட் பிரபு

Actor Vijay: விஜய்யின் லியோ கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் கெத்து காட்டியது. அதை தொடர்ந்து இப்போது அவர் தளபதி 68 படத்தில் பிஸியாகி உள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பலர் இதில் இணைந்துள்ளனர்.

இதன் சூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் வெங்கட் பிரபு ஏன் இந்த படத்தை எடுக்கிறோம் என நொந்து போய் இருக்கிறாராம். இதற்கு முக்கிய காரணம் விஜய் தான் என்ற அதிர்ச்சி தகவல் கசிந்துள்ளது. அதாவது அவர் படப்பிடிப்பு தளத்தில் ஓவர் பந்தா காட்டி வருகிறாராம்.

அதிலும் சில முக்கியமான க்ளோஸ் அப் காட்சிகளில் மட்டும் தான் அவர் நடிக்கிறாராம். மற்றபடி திரும்புவது, நடப்பது போன்ற காட்சிகளுக்கெல்லாம் டூப்பை வைத்து ஷூட் செய்ய சொல்கிறாராம். அண்மையில் வில்லனுடன் அவர் மோதும் காட்சி படமாக்கப்பட்டது.

Also read: இங்கயேன் ஷூட்டிங் வச்சோம்னு பரிதவிப்பில் விஜய்- வெங்கட் பிரபு?. சோகமா ஏர்போர்ட் வந்த தளபதி

அதில் பல இடங்களில் டூப் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதுதான் இப்போது திரை உலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் விஜய் வேலைன்னு வந்துட்டா முழு உழைப்பையும் கொடுத்து விடுவார். டூப் பயன்படுத்தாமல் பல ரிஸ்க்கான காட்சிகளில் அவர் நடித்த கதையும் உண்டு.

ஆனால் திடீரென அவர் இப்படி நடந்து கொள்வது பட குழுவினரையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆனால் இப்போது அவர் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்ற அந்தஸ்தில் இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அரசியலுக்கும் வரப்போகிறார். இதற்கு ரசிகர்கள் சப்போர்ட்டும் அதிகமாக இருக்கிறது.

மேலும் சாமானிய மக்களையும் அவர் இம்ப்ரஸ் செய்ய பல முயற்சிகளை எடுத்து வருகிறார். அதனாலேயே இவருடைய அரசியல் என்ட்ரி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி மாஸ் இடத்தில் இருப்பதாலேயே விஜய் இப்படி நடந்து கொள்கிறாராம். இதனால் பாவம் வெங்கட் பிரபு தான் தலை சுற்றி போய் இருக்கிறார்.

Also read: விஜய்யை நம்பினா வேலைக்காகாது.. பெரிய திமிங்கலத்தை லாக் செய்த அட்லி- ஷாருக்கான்

Trending News