திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சங்கரை மிஞ்சும் அளவிற்கு GOAT படத்தை செதுக்கும் வெங்கட் பிரபு.. இந்த கதை விஜய்க்கு செட் ஆகுமா?

Thalapathy 68- GOAT: சங்கர் என்பதைவிட பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னால் தான் இவருக்கு மிகவும் பொருந்தும். அந்த அளவிற்கு இவர் எடுக்கக்கூடிய படங்கள் அனைத்தும் பார்ப்பவர்களை வாய் அடைக்க வைக்கும் . அத்துடன் ஒவ்வொரு விஷயத்திலும் புது டெக்னாலஜியை பயன்படுத்தி படத்தை பிரமிக்க வைப்பார். அப்படிப்பட்ட இவரை மிஞ்சும் அளவிற்கு வெங்கட் பிரபு தளபதி 68 படத்தில் புது டெக்னாலஜியை வைத்து செதுக்கி வருகிறார்.

அதாவது இப்படத்தில் முழுக்க முழுக்க அட்வான்ஸ் சயின்டிஃபிக் டெக்னாலஜியை பயன்படுத்தி உள்ளார். அத்துடன் இளமையாக விஜய்யை காட்டுவதற்கு டிஏஜெனின் டெக்னாலஜியும் பயன்படுத்தி புது முயற்சியை வெங்கட் பிரபு எடுத்து வருகிறார். அத்துடன் விஜய்க்கு காதல் ரொமான்ஸ் என்பதையும் தாண்டி சண்டை காட்சிகளின் படங்களும் அதிக அளவில் கை கொடுத்து இருக்கிறது.

அந்த வகையில் GOAT படம் கிட்டத்தட்ட 80% ஆக்சன் காட்சிகளை தான் உருவாக்கிக் கொண்டு வருகிறார். அத்துடன் இப்படத்தின் கதை ஐந்து வயதில் தன்னுடைய மகனை தொலைத்த அப்பா, 50 வயதில் தான் மகனை திரும்பப் பார்ப்பது போல கதை உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்படம் ஹாலிவுட் படமான ஜெர்மன் மேன் என்ற படத்தின் காப்பி கதை.

Also read: 73 வயதில் செம ஸ்பீடில் இருக்கும் ரஜினி.. விஜய்யை ஓவர்டேக் செய்யும் தலைவர்

அதனால் இப்படத்தை பார்க்கும் பொழுது இது அட்டகாப்பி என்ற பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக அதை மறைப்பதற்காக பல இடங்களில் வெங்கட் பிரபு சில நாசுக்கான வேலைகளை பார்த்து வருகிறார். ஆனாலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை பார்த்தும் பெருசாக கொண்டாடும் அளவிற்கு ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதனால் அடுத்தடுத்து காட்சிகளில் வித்தியாசமான கதைகளை வடிவமைத்து எப்படியாவது ரசிகர்களை கவர்ந்து விட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார். எது எப்படியோ விஜய் படம் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக கல்லா கட்டிவிடும். அந்த அளவிற்கு தொடர்ந்து வசூல் மன்னனாக விஜய் ஜெயித்துக் கொண்டு வருகிறார்.

Also read: அஜித்தின் வலது கையை வம்பு இழுக்கும் விஜய்.. தளபதி 68-ல் நடக்கும் கலோபரம்

Trending News