வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மார்க்கெட் இல்லை என்றாலும் தூக்கிவிட நினைக்கும் வெங்கட்பிரபு.. விஜய்யின் உடன்பிறப்பாக நடிக்கப் போகும் ஹீரோ

Thalapathy 68: லியோ படத்தை விஜய் முடித்த கையோடு அடுத்ததாக வெங்கட் பிரபு கூட்டணியில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தைப் பற்றி இன்று அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் வெங்கட் பிரபு ஏமாற்றிவிட்டார். ஆனாலும் விரைவில் தளபதி 68 படத்தை பற்றி தரமான அப்டேட் வரும் என்று கூறி இருக்கிறார்.

இந்த சூழலில் தன்னுடைய படத்தின் ஹீரோ ஒருவர் மார்க்கெட் இல்லாமல் மிகுந்த கஷ்டப்பட்டு வருகிறார். அவரை தூக்கி விட வேண்டும் என்ற நோக்கில் தளபதி 68 படத்தில் அவரை நடிக்க வைக்க இருக்கிறார். இதற்காக விஜய்யிடம் கெஞ்சி கேட்டு சம்மதமும் வாங்கிவிட்டார் என்று அவரது நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : பட்ட அவமானங்களை படமாக்கும் தளபதி 68.. எல்லாத்தையும் ஒரு கை பார்த்திடலாம் துணிந்து நிற்கும் விஜய்

அதாவது வெங்கட் பிரபுவின் ஆரம்ப காலத்தில் இருந்து ஒரு கூட்டம் அவரைச் சுற்றி எப்போதுமே இருக்கும். அதுவும் சென்னை 600028 டீம் தற்போது வரை ஒன்றாக தான் சுற்றித் திரிகிறார்கள். இதில் ஜெய் வெங்கட் பிரபுவின் நிறைய படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். சினிமாவில் ஜெய்யை தூக்கி விட்டதே இவர்தான் என்று சொல்லலாம்.

அதன் பிறகு சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. ஆனால் அதன் பிறகு ஜெய் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் அவரை காலை வாரிவிட்டது. சமீபத்தில் அவரது நடிப்பில் தீராத காதல் படம் வெளியாகி இருந்தது. இந்த படமும் எதிர்பார்த்து அளவு போகவில்லை.

Also Read : அஜித்-யுவன் சாதனையை முறியடித்த விஜய்.. 5 மடங்கு லாபம் பார்த்த தளபதி 68

இந்த சூழலில் இசையமைப்பாளராக ஜெய் அவதாரம் எடுத்திருக்கிறார். மேலும் சினிமாவில் விட்ட மார்க்கெட்டை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று வெங்கட் பிரபுவிடம் சென்று தனது ஆதங்கத்தை கூறியிருக்கிறார். தளபதி 68 படத்தில் உனக்கு எப்படியாவது வாய்ப்பு வாங்கி தருகிறேன் என வெங்கட் பிரபு உறுதியளித்திருந்தாராம்.

ஏற்கனவே விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் ஜெய் நடித்திருந்தார். இப்போது நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய்க்கு தம்பியாக தளபதி 68 படத்தில் ஜெய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக இவ்வாறு ஒரு காம்போ உருவானால் ஜெயின் சினிமா கேரியர் ஏற்றத்தை சந்திக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

Also Read : தளபதி 68-க்கு ஆட்டம் காட்ட வரும் விடாமுயற்சி.. வட்டியும் முதலுமாக கொடுக்க தேதி குறிச்ச அஜித்

Trending News