திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

சனியனை தூக்கி பனியன்ல போட்ட கதையால இருக்கு.. லியோ எதிர்பார்ப்பை குறைக்கும் வெங்கட் பிரபு.!

Actor Vijay Leo: லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் லியோ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜைக்கு ரிலீஸ் ஆகிறது. ஆனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள்  குறைக்கும் விதமாக வெங்கட் பிரபு செயல்படுகிறார்.

விஜய் லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆனால் இப்போது சனியனை தூக்கி பனியன் போட்டுக்கிட்ட கதையாருக்கு. ஏனென்றால் விஜய் சொன்னதை கொஞ்சம் கூட கேட்காமல் வெங்கட் பிரபு  தளபதி 68 படத்தின் அப்டேட்டை தொடர்ந்து வெளியிடுகிறார்.

Also Read: எல்லாம் விஜய்யை அடிபணிய வைக்கத்தான்.. பப்ளிசிட்டிக்காக தில்லுமுல்லு செய்யும் லைக்கா

அதிலும் விஜய் 68 ஒவ்வொரு நாளும் புது புது நடிகர்களை சேர்த்துக் கொண்டே வருகிறார். இது லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் செய்த மாதிரியே செய்து வருகிறார். தினம்தோறும்  படத்தின் பரபரப்பை அதிகப்படுத்தி வருகிறார். தற்பொழுது இந்த படத்தில் சிம்பு நடிப்பதாக ஒரு பேச்சு வந்துள்ளது.

வெங்கட் பிரபு மாநாடு வெற்றிக்கு பிறகு இந்த படத்தை மிகவும் எதிர்பார்க்கிறார். ஏற்கனவே சிம்பு விஜய்க்காக வாரிசு படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார். அதனால் வெங்கட் பிரபு இந்த படத்தை ஒரு கேமியோவில் நடிக்க சிம்புவிடம் கூறியிருக்கிறாராம்.

Also Read: பெருந்தலைகள் பிரச்சனையில் சிக்கிய சில்வண்டு.. விஜய்யின் கனவால் சர்வமும் அடங்கி கிடக்கும் அட்லி

எப்ப வரணும்னு சொல்லுங்க, வந்து நடித்துக் கொடுத்துட்டு போறேன் என்று சொல்லி இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் மாதவன்,  பிரசாந்த், பிரபுதேவா, ஜெய், பிரியா மோகன் என லிஸ்ட் போய்க்கொண்டே இருக்கிறது. இதில் சிம்பு வேற வந்துட்டாரு.

இந்த படத்தின் பரபரப்பினால் லியோ படத்தை ரசிகர்கள் மறந்து வருகிறார்கள்.இதெல்லாம் தேவையில்லாத பஞ்சாயத்தா இருக்கே என விஜய் வெங்கட் பிரபுவின் வாயை அடைக்க முடியாமல் இருக்கிறார். அதே சமயம் தளபதி 68 படமும் லியோ படத்திற்கு நிகராக தரமாக தயாராகுவதால் ரசிகர்கள் கூடுதல் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

Also Read: லோகேஷ் கூப்பிட்டும் கதாபாத்திரம் பிடிக்கலைன்னு நோ சொன்ன நடிகர்..விசாரித்துப் பார்த்தால் கமலுடன் டிஷ்யூம்

Trending News