வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

90’s கிட்ஸ் மறக்க முடியாத அந்த ஒரு சம்பவம்.. மூக்கை உடைத்து விரட்டியடித்த வெங்கடேஷ் பிரசாத்!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆல்ரவுண்டர் கபில் தேவிற்கு அப்புறம் பௌலிங் யூனிட்டில் ஒரு பெரிய வெற்றிடமே உருவாகியது. அதை ஓரளவு நிரப்பியது என்றால் ஜவகல் ஸ்ரீநாத்தும், வெங்கடேஷ் பிரசாத்தும் தான். இவ்விருவரும் நீண்டகாலம் இந்திய அணிக்காக பந்து வீசினர்.

வெங்கடேஷ் பிரசாத் இவர் ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி.தற்போது கனரா வங்கியின் ஜெனரல் மேனேஜர் ஆக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேல் இந்திய அணியில் தனக்கென்று ஒரு நீங்காத இடத்தை பிடித்தவர். இவர் மீடியமாக பந்து வீசினாலும் இன்ஸ்விங் மற்றும் ஆப்ஸ்விங் செய்வதில் வல்லவர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றால் எப்பொழுதுமே ரசிகர்களிடம் ஒரு பெரிய எதிர்பார்ப்பு நிலவும். அதுவும் உலகக் கோப்பை போட்டி என்றால் சொல்லவே வேண்டாம் களத்தில் அனல் பறக்கும்

அப்படி நடைபெற்ற 1996ஆம் ஆண்டு உலக கோப்பை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் மறக்க முடியாத சம்பவம் என்றால் அது வெங்கடேஷ் பிரசாத் மற்றும் அமீர் சோஹைல் இருவருக்கும் நடைபெற்ற மோதல்.

Prasaad-Amir-Cinemapettai.jpg
Prasaad-Amir-Cinemapettai.jpg

முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 287 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி வீரர் அமீர் சோஹைல், வெங்கடேஷ் பிரசாத் வீசிய பந்தில் பவுண்டரி அடித்து விட்டு, ஆள்காட்டி விரலை நீட்டி ஸ்லெட்ஜிங் செய்தார். அடுத்த பந்தை ஆக்ரோசமாக வீசிய வெங்கடேஷ் பிரசாத், அமீர் சோஹைலை கிளீன் போல்ட் செய்தார்.

Prasad-Cinemapettai.jpg
Prasad-Cinemapettai.jpg

இதை சற்றும் எதிர்பாராத அமீர் சோஹைல் தலையை குனிந்தவாறு பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். வெங்கடேஷ் பிரசாத் அவருக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்து அனுப்பி வைத்தார்.

இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களிடையே இது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Trending News