விஜய் டிவியின் டாப் சீரியலாக விளங்கும் பாரதிகண்ணம்மா சீரியலின் வில்லியான வெண்பாவின் கைப்பொம்மை ஆக இருந்த பாரதி, அஞ்சலிக்கு தவறான சிகிச்சை அளித்ததாலும், சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பில் ஈடுபட்டதாலும் பாரதியால் வெண்பா வெறுத்து ஒதுக்கப் பட்டார்.
இதனால் கண்ணம்மாவிற்கு எதிராக பாரதியை தூண்டிவிட முடியாமல் வெண்பா தவித்துக் கொண்டிருந்தார். அத்துடன் விவாகரத்துப் பெறுவதற்காக பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒரே வீட்டில் வாழ்வதை பார்த்து வயித்தெரிச்சலில் இருந்த வெண்பாவிற்கு தற்போது அல்வா சாப்பிடுவது போல் பாரதி-கண்ணம்மா இருவரும் பிரிந்தது சாதகமாகி விட்டது.
எனவே இதுதான் சரியான சமயம் என்று வெண்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதுபோல் நாடகமாடி பாரதியை தன்னுடைய வீட்டிற்கு வர வைக்கிறார். அதன்பிறகு பாரதியிடம் அஞ்சலிக்கு ஏன் தவறான மருந்தை எழுதிக் கொடுத்தேன் என்பதற்கு விதவிதமாக காரணம் ஜோடித்து சொல்கிறார்.
அஞ்சலியை இழந்தால் உன்னுடைய குடும்பத்தினர் தாங்குவார்களா? ஆகையால் தான் அஞ்சலி குழந்தையை கலைப்பதற்காக அப்படிப்பட்ட மாத்திரையை உன்னுடைய பிரிஸ்கிரிப்ஷனில் இருந்து எழுதிக் கொடுத்தேன். இதெல்லாம் உனக்காக தான் செய்தேன் பாரதி என்று உருக உருக பேசி, பாரதியை ஒருவழியாய் வெண்பா சமாதனப்படுத்தி விடுகிறார்.
அத்துடன் ‘நீ என்னுடைய பாரதி தானே’ என்று பாரதியிடம் கேட்டு, அவனை ஆமா என்று சொல்ல வைக்கிறார். அதன்பிறகு பாரதியை வெண்பா கட்டிப்பிடித்து அழுதபடி நீலிக் கண்ணீர் வடிக்கிறார். இதன்பிறகு வெண்பா இஷ்டத்திற்கு பாரதிக்கு ஏற்றிவைட்டு கண்ணம்மாவை டார்ச்சல் செய்ய தயாராகிறார்.
ஆனால் வெண்பாவின் சித்தப்பா பாரதிக்கு போன் செய்து, பாரதியின் உடலில் எந்தக் குறைபாடும் இல்லை என்றும் வெண்பா பாரதிக்கு செய்த துரோகத்தை போட்டு விடுங்க போகிறார். அதன் பிறகு பாரதி வெண்பாவை தூக்கி எறிந்துவிட்டு கண்ணம்மா உடன் சேர்ந்து வாழ உள்ளார். இதெல்லாம் வரும் எபிசோடில் வரிசையாக அரங்கேற உள்ளது.