செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

ரெட் ஜெயன்டை அசிங்கப்படுத்திய படக்குழு.. மொத்தமும் சொதப்பலாய் நடந்த வெந்து தணிந்தது காடு பங்க்சன்

நேற்று நடந்த வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ரெட் ஜெயன்ட்க்கு எந்த வித முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்றும், மேலும் விழா மிகவும் மொக்கையாக நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

Also Read: உங்க கூட ஒரு படம் நடிக்கணும்.. சிம்புக்கு மேடையில் ஷாக்கான பதில் கொடுத்த கமல்

உதயநிதி ஸ்டாலினின் பட விநியோக நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் இப்போதைக்கு கோலிவுட்டின் பல முக்கிய படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தையும் ரெட் ஜெயன்ட் தான் டிஸ்ட்ரிபியூட் செய்கிறது.

Also Read:ரஜினி பட வரிசையில் முத்து பாய்.. பழைய படங்களின் காப்பியா வெந்து தணிந்தது காடு

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நெஷனல் குழுமத்தின் தலைவர் ஐசரி கணேசன் தயாரித்து இருக்கிறார்.

இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவின் போது ரெட் ஜெயன்ட் உறுப்பினர்களை மதிக்கவே இல்லை. ஆனால் திரைப்பட தயாரிப்பாளர் அன்புசெழியனுக்கு பயங்கர மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக எல்லா விழாவுக்கும் வருகை தரும் உதயநிதி நேற்று வரவில்லை.

Also Read: திக்கத்தவன் கூடதான் தெய்வம் நிற்கும்.. டானாக மிரட்டும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு ட்ரெய்லர்

மேலும் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ரெட் ஜெயன்ட் உறுப்பினர்களை எழுப்பி மூன்றாவது வரிசையில் உட்கார வைத்திருக்கிறார்கள். படத்தில் நடித்தவர்களுக்கு மட்டுமே மரியாதை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சிம்பு எலிகாப்டரிலிருந்து இறங்கி பயங்கர மாஸ் என்ட்ரி கொடுத்தாலும், ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்த்த அந்த ஸ்பீச் நேற்று இல்லை. சிம்பு நேற்று ரொம்பவே அடக்கி வாசித்தார். மேலும் இந்த ஷோ ரொம்ப போராக இருந்ததாகவும் கூறுகின்றனர்.

Advertisement Amazon Prime Banner

Trending News