வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

GVM-சிம்பு கூட்டணியின் வெந்து தணிந்தது காடு எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிம்புவின் கூட்டணியில் இன்று பெரும் ஆரவாரத்துடன் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் தற்போது சிம்புவின் ரசிகர்களால் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது.

venthu thanithathu kaadu
venthu thanithathu kaadu

இதனால் சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது அதிலும் காலை ஐந்து மணிக்கு முதல் ஷோவை பார்க்க வந்த ரசிகர்கள் சிம்புவின் கட் அவுட்டிற்கு 108 தேங்காய் உடைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

VendhuThanindhathuKaadu-review
VendhuThanindhathuKaadu-review

Also read:வெந்து தணிந்தது காடு 5 மணி ஷோ பாக்க போறீங்களா.? பயமுறுத்தி அறிக்கை வெளியிட்ட கவுதம் மேனன்

தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதில் வித்தியாசமான முறையில் வெளிவந்துள்ள இந்த கேங்ஸ்டர் படம் விறுவிறுப்பாக இருப்பதாகவும், கடைசி 20 நிமிடங்கள் அருமையாக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

venthu thanithathu kaadu
venthu thanithathu kaadu

மேலும் ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்களும், கௌதம் மேனனின் திரை கதையும் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் சிம்புவின் முத்து கதாபாத்திரம் வெறித்தனமாக இருந்ததாகவும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

venthu thanithathu kaadu
venthu thanithathu kaadu

Also read:சிம்புவின் மாஸ் எல்லாம் கிடையாது.. இது தான் வெந்து தணிந்தது காடு படத்தின் கதை

அதிலும் 21 வயது இளைஞனாக வரும் சிம்பு ஆச்சரியப்படுத்தி விட்டதாகவும், அவருடைய பெர்ஃபார்மன்ஸ் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர். அதேபோன்று விறுவிறுப்பாக நகரும் இந்த கதை புரிவதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொண்டாலும் புதுமையான இந்த கதைக்களம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது.

venthu thanithathu kaadu
venthu thanithathu kaadu

படம் வெளிவருவதற்கு முன்பே கௌதம் மேனன் கூறியது போன்று இரவு நன்றாக தூங்கிவிட்டு நல்ல மனநிலையில் முதல் காட்சியை பார்த்தால் தான் புரியும் என்று சில ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆக மொத்தம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு சிறிதும் குறைவில்லாமல் வெளிவந்துள்ள வெந்து தணிந்தது காடு தற்போது வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

Also read:சிம்புவுடன் இணைந்த சிவகார்த்திகேன், யாருமே எதிர்பார்க்கலல்ல.. சண்டைனா அது ஃபேன்ஸ் மட்டும் தான், நாங்க இல்ல

Trending News