மாநாடு வசூலை முறியடித்த வெந்து தணிந்தது காடு.. முதல் நாள் கலெக்ஷன் இத்தனை கோடியா?

சிம்பு மாநாடு வெற்றியை தொடர்ந்த கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இவர்களது கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் உருவாக இருந்தது. இந்நிலையில் மூன்றாவது முறையாக இணைந்த இப்படம் ஹாட்ரிக் வெற்றி அடைந்துள்ளது.

அதாவது வெந்து தணிந்தது காடு படத்திற்காக தனது உடல் எடையை சரமாரியாக குறைத்து 20 வயது பையனை போல் சிம்பு காட்சி அளிக்கிறார். இப்படத்தை ஐசாரி கணேஷ் தயாரித்துள்ளார். மேலும், ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Also Read :வெந்து தணிந்தது காடு, சிம்புக்கு ஒரு லட்சம் பைன் போடு.. சுக்குநூறான ஆடி கார்

நேற்று மிகபெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களை பூர்த்தி செய்துள்ளது. முதல் நாளே தமிழ்நாடு முழுவதும் அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்ஃபுல்லாக இருந்தது. மேலும் படத்திற்கு நேர்மையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் முதல் நாளில் 8.5 கோடி வசூல் செய்திருந்தது. சிம்பு படங்களில் முதல் நாள் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை மாநாடு படம் பெற்றிருந்தது. தற்போது அந்த சாதனையை வெந்து தணிந்தது காடு படம் முறியடித்துள்ளது.

Also Read :சிம்புக்கு போட்டியாக டீசரை இறக்கிவிட்ட செல்வராகவன்.. சைக்கோவாக மிரட்டும் தனுஷ்

அதாவது நேற்று சென்னையில் மட்டும் இப்படம் 94 இலட்சம் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமின்றி இந்திய அளவில் 7.4 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்ததாம். மொத்தமாக நேற்று மட்டும் உலக அளவில் வெந்து தணிந்தது காடு படம் 10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் முதல் நாள் மாநாடு வசூலை இப்படம் முறியடித்துள்ளது. மேலும் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பத படத்தின் வசூல் இரட்டிப்பாக அதிக வாய்ப்பு உள்ளது. வெந்த தணிந்தது காடு படம் 100 கோடி கிளப்பில் இணையும் என சிம்பு ரசிகர்கள் நம்புகிறார்கள்.

Also Read :ஹாட்ரிக் வெற்றி பெறுமா சிம்பு, கௌதம் மேனன் கூட்டணி.. வெந்து தணிந்தது காடு முழு விமர்சனம்