இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது பேசுபொருளாக மாறிவருவது விராட் கோலியும் அவருடைய நடத்தையும் தான். சமீபகாலமாக விராட் கோலியும், அவர் அணியில் நடந்துகொள்ளும் விதமும் அவ்வளவு விரும்பத்தக்கதாக இல்லை என்று அணி வீரர்களை குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி, சீனியர் வீரர்களின் பங்களிப்பு சரி இல்லை என்றும் அதனால்தான் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் தோல்வி அடைந்தோம் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக சீனியர் வீரர்கள் அனைவரும் போட்டி முடிந்த பின்னர் விராட்கோலி வேறொரு உலகத்துக்கு சென்றுவிடுகிறார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பயிற்சியில் செய்யும் தவறுகளையும், அதை திருத்திக் கொள்ளும் முயற்சிகளையும் அவரிடம் சொன்னால் அவர் கேட்க மறுக்கிறார் என்று புகார் அளித்தனர்.
இந்தப் பிரச்சனையினால் தான் பிசிசிஐ ஒருநாள் போட்டிக்கு, ரோஹித் ரோஹித் சர்மாவையும், டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலியையும் கேப்டனாக நியமித்தது. அதுமட்டுமின்றி 20 ஓவர் போட்டிகளுக்கும் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்து, விராத் கோலியை ஒதுக்கியது பிசிசிஐ. இதற்கு முக்கிய காரணம் விராட் கோலியின் பங்களிப்பு சரியாக இல்லை என்ற புகார் தான்.
இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விராட் கோலி யாருக்காகவும் நான் இறங்கி செல்ல வேண்டியதில்லை, என் திறமையையும் அவர்களுக்காக நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை, என்று திமிராக பதில் சொல்லியுள்ளார் .
இப்படி விராட் கோலி பேசியது தவறு என்றும் நாம் இந்திய நாட்டிற்காக விளையாடுகிறோம் நாம் இருக்கும் இடத்தை நாம் மட்டும் அல்லாது அனைவரும் மதிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் விராட் கோலியை விளாசியுள்ளனர்.