Delhi Ganesh: பழம்பெரும் தமிழ் நடிகர் டெல்லி கணேஷ், முதுமை காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மறைந்துவிட்டார். அவருக்கு 80 வயதாகிறது.
அவர் நேற்றிரவு 11.30 மணிக்கு மறைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி கணேஷ் 1976ல் இயக்குநர் இமயம் கே. பாலசந்தரின் “பட்டினப் பிரவேசம்” திரைப்படத்தில் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்னர், இந்திய வான்படையில் 1964-1974 வரை பத்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். டெல்லி கணேஷ், நாயகன் (1987) மற்றும் மைக்கேல் மதன காம ராஜன் (1990) போன்ற படங்களில் நடித்த கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானர் . 1979ல் “பசி” படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு அரசின் சிறப்பு பரிசை வென்றார்.
எந்த விதமான குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தக் கூடியவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற பிரபலங்களுடன் இவர் பணியாற்றியுள்ளார். உலக நாயகன் கமலஹாசன் தொடர்ந்து தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுத்து வந்தது குறிப்பிட தக்கது.