செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

மூளையில் நடந்த அறுவை சிகிச்சை.. நடிகர் பிரபுவின் சமீபத்திய ஹெல்த் அப்டேட்

Prabhu: நடிகர் பிரபுவின் உடல் நலம் குறித்து ஜூம் வெப்சைட்டில் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

நடிகர் பிரபு ஹீரோவாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி தற்போது குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். பிரபு என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது அவருடைய கன்னக்குழி தான்.

சின்னதம்பி படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பெயர் வாங்கிய பிரபு இளைய திலகம் என்று அழைக்கப்படுகிறார்.

நடிகர் பிரபுவின் சமீபத்திய ஹெல்த் அப்டேட்

இன்றைய இளைஞர்கள் வரை பிரபுவுடன் நடிப்பதற்கு விரும்புவதற்கு அவருடைய தோழமையான குணம் தான் காரணம்.

நடிகர் பிரபுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார்.

மூளை நரம்பில் ஏற்பட்ட வீக்கத்திற்காக அறுவை சிகிச்சை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இது குறித்து பிரபுவின் தரப்பிலிருந்து எந்த அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News