வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினியை அடிக்க தயங்கிய மூத்த நடிகர்.. தைரியம் கொடுத்து அடி வாங்கிய சூப்பர்ஸ்டார்

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலகமெங்கும் சூப்பர்ஸ்டாருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவரது படம் ஹிட்டானாலும், ஆகாவிட்டாலும் அவரை இன்று வரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள் ஏராளம். இதன் காரணமாக தான் சூப்பர்ஸ்டாருக்கு 72 வயது ஆகியும் அவரை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் லைன் கட்டி நிற்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு தற்போது போட்டி நிலவி, யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற சர்ச்சை வந்தபோது கூட, ரஜினியே இப்படத்தை என்றோ தான் தூக்கி எரிந்ததாக கூறினார். ஆனால் அவரது ரசிகர்கள், என்றுமே ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டும் தான் என அவரை விட்டுக்கொடுக்காமல் பேசி வருகின்றனர். அந்த அளவுக்கு சூப்பர்ஸ்டார் மீது அளவுகடந்து அன்பு வைத்திருக்கும் ரசிகர்கள் அவரை நடிப்பு விஷயத்திலும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.

Also Read: 2வது முறையும் அவருடன் பாடும் வாய்ப்பை இழந்த ரஜினிகாந்த்.. ஒத்திகை பார்க்கும் பொழுது ஏற்பட்ட சங்கடம்

அதாவது, சூப்பர்ஸ்டார் படத்தில் யாரேனும் அவரை மரியாதை குறைவாக பேசும்படியான டயலாக்குகள் அமைந்தாலும், அவரை மற்ற நடிகர்கள் அடிக்கும் காட்சிகள் அமைந்தாலும் திரையரங்குகளில் திரைகள் கிழிக்கப்படும். அந்த அளவுக்கு சூப்பர்ஸ்டார் மீது ஒருத்தரும் கை வைக்க கூடாது, அது நடிப்பாக இருந்தாலும் சரி என ரசிகர்கள் அவரை தாழ்த்தும்படியான காட்சிகளில் அவரை விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.

அந்த வகையில் பிரபல வில்லன் நடிகர் ஒருவர் ரஜினியின் ரசிகர்களுக்கு பயந்து சூப்பர்ஸ்டாரை அடிக்க பயந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 1995 ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, ராதாரவி, வடிவேலு, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்து மெகாஹிட்டான படம் தான் முத்து. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில், பணக்காரனாக இருக்கும் ரஜினிகாந்த், ஏழையாக வளர்க்கப்பட்டு பின்னர் அவருடைய வாழ்க்கை தரம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்தும் கதைக்களத்தோடு இப்படம் அமைந்திருக்கும்.

Also Read: ஒரே நாளில் 3 படங்களில் நடித்து ரஜினி வாங்கிய முதல் சொத்து.. குட்டிச்சுவரில் பாட்டிலும், கையுமாய் நின்ற ரஜினிகாந்த்

அந்த வகையில், இப்படத்தில் முக்கிய வில்லனாக ராதாரவி நடித்திருப்பார். இவர் இப்படத்தில் சூப்பர்ஸ்டாரை அடிக்கும் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்த காட்சியில் நடிக்கவே மாட்டேன் என இயக்குனரிடம் ராதா ரவி கூறியுள்ளார். காரணம், சூப்பர்ஸ்டாரை அடித்தால் ரசிகர்கள் என்னை அடித்து துவம்சம் செய்து விடுவார்கள், அதனால் இந்த கட்சியில் நான் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

இதனை புரிந்துக்கொண்ட சூப்பர்ஸ்டார், நீங்கள் என்னை அடித்தால் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். உங்களை எதுவும் சொல்லமாட்டார்கள், நீங்கள் அடித்தால் தான் சரியாக இருக்கும் என ராதாரவியிடம் சூப்பர்ஸ்டார் கூறியுள்ளார். உடனே சூப்பர்ஸ்டாரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் சரி என சொல்லி தயங்கித் தயங்கி ரஜினியை, ராதாரவி அடித்தாராம். அதன் பின்னர் அந்த காட்சி ரசிகர்களை பெருமளவு பாதிக்கவில்லை என சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து ராதாரவி பேசியுள்ளார்.

Also Read: அடுத்த வாட்டி வரும்போது குடிக்காம வாங்க.. ராதாரவியை அவமானப்படுத்திய விஜய்யின் போன் கால்

Trending News