வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

2023-இல் எதிர்பாராமல் திடீரென ஏற்பட்ட 5 அதிர்ச்சியான மரணங்கள்.. குணசேகரனுக்கு பின் சோலி முடிந்த டிஆர்பி

Famous kollywood actors passed away in 2023: கலைஞர்களின் நிலையில்லா வாழ்க்கையில் நிலைப்பது என்னவோ கலைஞரின் பேரும் கலையும் மட்டும்தான். பல கோடி சொத்து இருந்தாலும் இயற்கையிடம் அடிபணியத்தான் வேண்டியுள்ளது. கலைஞர்கள் மறைந்தாலும் அவர்களின் சுவடுகள் அவர்களின் நினைவை மறக்க மறுக்கின்றன. 2023 இல் பிரபலங்கள் பலரின் இழப்புகள் நம்மை அசைத்து உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களில் சிலர்.

மாரிமுத்து: “ஏம்மா ஏய்” என்ற அதிகார தொனியின் சொந்தக்காரரான இவர் சன் டிவியின் எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழக மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருந்தார். சினிமாவில் உதவி இயக்குனராக தன் வாழ்க்கையை தொடங்கி இயக்குனராக பிரமோஷன் வாங்கி குணச்சித்திர நடிகராக தன் வாழ்க்கையை மாற்றியவர். வில்லன் போன்ற முகத்தோற்றத்தில் இருந்தாலும் இயல்பில் இனிமையானவர். கடந்த செப்டம்பர் மாதம் டப்பிங் இன் போது ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இவர் இறந்த பின் எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பி சோலி முடிந்தது என்று தான் கூற வேண்டும்.

மயில்சாமி: மிமிக்ரி மற்றும் மேடை நாடக கலைஞர் ஆன மயில்சாமி சினிமா, அரசியல்,ஆன்மீகம் என ஓடிக் கொண்டிருந்த வேளையில் மாரடைப்பின் காரணமாக பிப்ரவரி 19 காலமானார். முன்பு நிகழ்ச்சி ஒன்றில் விவேக் மயில்சாமி பற்றி குறிப்பிடும் போது தன்னிடம் இல்லை என்றாலும் ஹெல்ப்! ஹெல்ப் என்று சொல்லி  தொல்லை கொடுத்து தேவைப்படுபவர்களுக்கு  உதவி செய்வார் என்பதிலிருந்து இவரின் உதவும்  குணத்தை நாம் அறியலாம்.

Also read: வந்த சுவடு தெரியாமலேயே மறைந்து போன குணசேகரன்.. புது அஸ்திவாரத்தை கையில் எடுத்த எதிர்நீச்சல்

மனோபாலா: சினிமாவின் அடி மட்டத்திலிருந்து முன்னுக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர். இயக்குனர் தயாரிப்பாளர் குணசேத்திர நடிகர் என பன்முக திறமைகளை கொண்ட மனோபாலா  அவர்கள்  ஒல்லியான தோற்றம் மற்றும் காமெடியின் மூலம் அனைவருக்கும் பரிசயமானார். சதுரங்க ஹச் வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை படத்தின் தயாரிப்பாளரும் இவரே. கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை மேற்கொண்டிருந்த மனோபாலா மே 3 இல் காலமானார்.

விஜய் ஆண்டனி மகள் மீரா: பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது விபத்துக்கு உள்ளாகி மீண்டு வந்த விஜய் ஆண்டனி  தனது மகளின் 16 வயது மகள் மீரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து மீளா துயரில் ஆழ்ந்துள்ளார். பள்ளி படிப்பை தொடர்ந்து கொண்டிருந்த மீரா மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது சினிமா வட்டாரத்தை தாண்டி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று.

பங்காரு அடிகள்: பெண்கள் கருவறையில் நுழையலாம் என புரட்சி செய்து மேல்மருவத்தூர் அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்படும் பங்காரு அடிகள், வயது முதிர்ச்சியின் காரணமாக அக்டோபரில் காலமானார். ஆதிபராசக்தி தொண்டு நிறுவனத்தின் மூலமாக பல சமூக பணிகளை மேற்கொண்டு வந்த அடிகளாரருக்கு மத்திய அரசு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

Also read: இந்த ரெண்டு கேரக்டர் மறைந்து போனதால் தலைகீழாக மாறிய சீரியல்.. டிஆர்பி இல்லாமல் தடுமாறும் சன் டிவி, விஜய் டிவி

Trending News