ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த 4 படங்கள்.. போராடி தூக்கி விட நினைத்த கேப்டன்

Veteran Kollywood Actor Vijayakanth’s son shanmugapandian 4 movies: “அந்த வானத்தப்போல மனம் படைத்த மன்னவரு” என்ற வாக்கியத்திற்கு ஏற்ப வாழ்ந்து சென்றவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். சினிமாவில் கடின உழைப்புடன் பெருத்த அவமானங்களை சந்தித்த விஜயகாந்த், தனக்கு ஏற்பட்ட நிலை வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தீவிர கவனத்துடன் இருந்தவர். அதனாலேயே என்னவோ பல நடிகர்களும் திரையில் ஜொலிக்க, தான் ஒரு தூண்டுகோலாக இருந்தார்.

சகாப்தம்: சுரேந்தர் இயக்கத்தில் 2015 வெளிவந்த சகாப்தம் படத்தில் புதுமுக நாயகனாக அறிமுகமானார் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் . கிராமத்து இளைஞன் மலேசியாவிற்கு வேலை தேடிச்சென்று துப்பறியும் நபராக மாறி குற்றத்தை தடுப்பது போன்ற  திரைக்கதையில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் வந்திருந்து சிறப்பு செய்தார். எனினும் படம் எதிர்பார்த்த வெற்றியடையாமல் போனது.

தமிழன் என்று சொல்: தமிழர்களின் வரலாற்றை சித்தரிக்கும் விதமாக  எடுக்கப்பட்ட இப்படத்தில் விஜயகாந்த் முக்கிய ரோலில் தனது மகன் சண்முக பாண்டியன் உடன் இணைந்து நடிப்பதாக தகவல்கள் பரவின.  நீண்ட இடைவெளிக்குப்பின் விஜயகாந்த் நடிக்கும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி இருந்த இப்படம் பல காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

Also read: தமிழ் சினிமாவில் ஹீரோவை மிஞ்சிய ஸ்மார்ட் வில்லன்கள்.. 90களில் அழகில் மிரட்டிய விஜயகாந்த்தின் உயிர் நண்பன்

மதுரவீரன்: பி ஜி முத்தையாவின் இயக்கத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை  கருவாகக் கொண்டு  உருவாக்கப்பட்ட படம் மதுரவீரன். இப்படத்தில் சண்முக பாண்டியன்,மீனாட்சி, சமுத்திரகனி, கோபி, மொட்ட ராஜேந்திரன் என பலரும் நடித்திருந்தனர்.

படைத்தலைவன்: மதுர வீரன் படத்தை தொடர்ந்து இளையராஜாவின் இசையில் வால்டர் படத்தின் இயக்குனர் அன்பு இயக்கத்தில் முழுக்க முழுக்க திரில்லர் கதையுடன்  காட்டுக்குள் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சண்முக பாண்டியன் நடிக்கும் படம் படைத்தலைவன். படத்தின் பர்ஸ்ட் லுக் மிரட்டும் வகையில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

சின்ன வயது விஜயகாந்தை நினைவுபடுத்தும் வண்ணமாக படத்தின் போஸ்டர் அமைந்துள்ளது. கன்னடத்து காந்தாராவை போன்று வித்தியாசமான திரைக்கதையுடன் ரெடியாகி வரும் படைத்தலைவனை விஜயகாந்தின் குடும்பத்தினர் மலைபோல நம்பியுள்ளனர். படைத்தலைவன், சண்முக பாண்டியனின் திரை உலக வாழ்க்கைக்கு திருப்பு முனையாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Also read: பிரேமலதா போட்ட கண்டிஷனை காற்றில் பறக்க விட்ட விஜயகாந்த்! செகண்ட் இன்னிங்சில் விஜயகாந்த் பட்டைய கிளப்பிய 5 படங்கள்

Trending News