Bumper Movie Review: அறிமுக இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் 8 தோட்டாக்கள் பட ஹீரோ வெற்றி, பிக் பாஸ் ஷிவானி, ஜிபி முத்து மற்றும் ஹரிஷ் பெரடி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பம்பர். இப்படத்தின் இயக்குனர் ஒரே கதையில் அடுத்தவரின் பணத்தை திருடுபவர் மற்றும் உரிய இடத்தில் ஒருவரின் பணத்தை ஒப்படைக்க போராடும் மனிதன் என இரண்டையும் காட்டி இருக்கிறார்.
அதாவது படத்தின் கதாநாயகன் வெற்றி பணம் வேண்டும் என்பதற்காக திருட்டு, சாராயம் விற்பது என எல்லாம் செய்யும் களவாணியாக இருக்கிறார். அவருடைய முறை பெண்ணாக நடிகை ஷிவானி நடித்திருக்கிறார். ஊரில் பெரிய தலை ஒன்று மர்மமான முறையில் இறந்து போக அந்த பலி வெற்றியின் மீது விழுகிறது.
Also Read : விஜய் சேதுபதியோடு நடிச்சும் பிரயோஜனம் இல்லை.. அந்த மாதிரி கேரக்டர்களால் சினிமாவை வெறுக்கும் ஷிவானி
இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக சபரிமலை கோயிலுக்கு வெற்றி செல்கிறார். தமிழ்நாட்டில் லாட்டரி டிக்கெட் தடை செய்யப்பட்டாலும் கேரளாவில் இப்போது இருக்கிறது. இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும்போது கேரளாவில் லாட்டரி டிக்கெட் கடை நடத்தும் முதியவராக ஹரிஷ் பெரடி நடித்து இருக்கிறார்.
அப்போது அவரிடம் இருந்த ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கிய வெற்றி அங்கேயே போட்டுவிட்டு செல்கிறார். கடைசியில் அந்த டிக்கெட்டுக்கு 10 லட்சம் பம்பர் லாட்டரி விழுந்துள்ளது. அந்த டிக்கெட்டை எடுத்து வைத்திருந்த ஹரிஷ் பெரடி உரிய நபரிடம் செலுத்த வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி புறப்படுகிறார்.
Also Read : 22-வது பிறந்தநாள் புகைப்படத்தை வெளியிட்ட ஷிவானி.. நைட் பார்ட்டியில் நெருக்கமாக போஸ் கொடுத்த பாலாஜி
கடைசியில் ஹரிஷ் மிக ஏழ்மையானவராக இருந்தும், தனது குடும்பம் தடுத்தும் கூட பணத்தை வெற்றியிடம் சேர்த்தே ஆக வேண்டும் என்று செல்கிறார். மேலும் இறுதியில் வெற்றிக்கு பம்பர் கிடைத்ததா, அதை வைத்து என்ன செய்தார் என்பதுதான் பம்பர் படத்தின் கிளைமாக்ஸ்.
நேர்த்தியான கதை மூலமாக படத்தை கடைசிவரை பார்க்க செய்திருக்கிறார் இயக்குனர். அதுமட்டுமின்றி படத்தில் அனைத்து கதாபாத்திரத்தையும் சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறார். ஜிபி முத்து சில காமெடி காட்சிகளில் வந்து அசத்து இருந்தார். முதல் பாதியில் சில தேவை இல்லாத நகைச்சுவையை குறைத்து இருந்தால் கண்டிப்பாக வெற்றிக்கு பம்பர் தான்.
சினிமா பேட்டை ரேட்டிங்: 2.5/5