Vetri Duraisamy : முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் தான் வெற்றி துரைசாமி. கடந்த 9 நாட்களாகவே இவரை பற்றிய செய்தி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வெற்றி துரைசாமி இயக்குனர் வெற்றிமாறன் இடம் சிறிது காலம் பணியாற்றிய நிலையில் என்றாவது ஒரு நாள் என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்போது ஒரு புதிய படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தாராம்.
அதற்கான லொகேஷன் பார்ப்பதற்காக இமாச்சல் பிரதேசம் சென்றிருக்கிறார். தனது நண்பர் கோபிநாத்துடன் இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில் இமாச்சலில் இருந்து சென்னைக்கு திரும்பும் போது கஷங் நாலா என்கிற மலைப்பகுதியில் கார் விபத்துக்கு உள்ளாகி ஆற்றில் கவிழ்ந்து விட்டது.
இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற டிரைவர் மற்றும் கோபிநாத் இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்தனர். ஆகையால் கார் டிரைவர் உயிரிழந்த நிலையில், கோபிநாத் உடலில் காயங்களுடன் மீக்கப்பட்டார். மேலும் வெற்றி துரைசாமி சீட் பெல்ட் அணியாத காரணத்தினால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
மேலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் வெற்றி துரைசாமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அவரின் தந்தை சைதை துரைசாமி வெற்றியைப் பற்றி துப்புக் கொடுப்பவர்களுக்கு ஒரு கோடி சன்மானம் தருவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஆற்றில் வெற்றியின் எடை கொண்ட பொம்மையை விட்டு எந்த திசையில் சென்று இருப்பார் என போலீசார் ஆய்வில் இறங்கி இருந்தனர்.
ஒன்பது நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஸ்பா வீரர்கள் கார் கவிழ்ந்த இடத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் வெற்றி துரைசாமியின் உடலைக் கண்டெடுத்துள்ளனர். மேலும் பணிப்படர்ந்த சட்லெஜ் என்பதால் அவரின் உடலில் எந்த சேதமும் இல்லாமல் மீட்கப்பட்டார். இன்று வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
Also Read : நம்ம கண்டுபிடிப்பு நமக்கே ஆப்பு.. வேலைக்கு உலை வைத்து பயமுறுத்தும் AI டெக்னாலஜி