திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

2 வருட கஷ்டத்திற்கு பலன் கிடைத்ததா.? சத்தம் இல்லாமல் நடந்த பார்ட்டி, விடுதலை 2 பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்

Viduthalai 2: கடந்த வருட இறுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விடுதலை 2 வெளியானது. வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி கூட்டணியில் ஏற்கனவே முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதை அடுத்து இரண்டாம் பாகத்திற்கும் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. முழுக்க முழுக்க விஜய் சேதுபதியை மையப்படுத்தி இருந்த இப்படத்தில் சூரிக்கு வாய்ப்பு குறைவுதான்.

இருந்தாலும் இந்த கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. வணிக ரீதியாக படம் தயாரிப்பாளருக்கு சிறு நஷ்டத்தை கொடுத்திருக்கிறது என்ற தகவல் ஒரு புறம் இருக்கிறது.

விடுதலை 2 பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்

ஆனால் பட குழு சத்தம் இல்லாமல் ஒரு பார்ட்டியை நடத்தி முடித்திருக்கின்றனர். அதில் வெற்றி மாறனுக்கு பெரிய மாலை அணிவித்து கொண்டாடி இருக்கின்றனர்.

இந்த நிகழ்வில் சூரி, விஜய் சேதுபதி உட்பட விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் டெக்னீசியன்கள் இரண்டு வருடத்திற்கும் மேலாக கடும் உழைப்பை கொடுத்துள்ளனர்.

அவர்களை கௌரவிக்கும் விதமாக நினைவு பரிசும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் விடுதலை 2 தமிழ்நாட்டில் மட்டுமே 42 கோடிகளை வசூலித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் உலக அளவில் 70 கோடியை வசூல் செய்திருக்கிறது. அதனால் பட குழுவினர் அனைவருக்கும் ஏகபோக சந்தோஷம் தான்.

அதை கொண்டாடிய கையோடு விஜய் சேதுபதி, சூரி இருவரும் அடுத்தடுத்த படங்களை கமிட் செய்ய தொடங்கி விட்டனர். விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வரலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Trending News