வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தலைவலியாக மாறிப்போன வாடிவாசல்.. இறங்கி வந்த சூர்யாவுக்கு ட்விஸ்ட் வைத்த வெற்றி மாறன்

Suriya-Vetrimaaran: வெற்றிமாறன், சூர்யா கூட்டணியின் வாடிவாசல் அறிவிப்பு எப்போதோ வெளிவந்தது. ஆனால் படம் இன்னும் தொடங்காமல் இழுத்தடித்துக் கொண்டே போகிறது. தற்போது கங்குவாவில் பிஸியாக இருக்கும் சூர்யா அடுத்தடுத்த படங்களையும் கமிட் செய்து வருகிறார்.

அதனாலேயே வாடிவாசலின் கதி என்ன என அவருடைய ரசிகர்கள் பீதியில் இருக்கின்றனர். அதற்கு ஏற்றார் போல் பருத்திவீரன் பஞ்சாயத்தும் வாடி வாசலுக்கு பெரும் தடையாக இருக்கிறது. இதனால் சூர்யா இப்படத்தில் நடிக்க மாட்டார் என்று கூட ஒரு செய்தி பரவியது.

இந்த சூழலில் வாடிவாசலில் நடிக்க சூர்யா இறங்கி வந்திருக்கிறார். ஆனால் அங்கும் ஒரு ட்விஸ்ட் வைத்து அவருக்கு ஷாக் கொடுத்து இருக்கிறார் வெற்றிமாறன். அதாவது சூர்யாவுக்கு இப்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Also read: இவரை ஏமாற்றிய இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் படங்கள்… விழித்துக் கொண்ட சூர்யா

அதற்கான பரபர பேச்சுவார்த்தையும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இது கிட்டத்தட்ட உறுதியாகும் நிலையிலும் உள்ளது. அதனால் சூர்யா முதலில் வாடிவாசலுக்கு ஒரு பிள்ளையார் சுழியை போட்டு விட நினைத்திருக்கிறார். அதை தொடர்ந்து தற்போது வெற்றிமாறனிடமும் இது குறித்து பேசி விட்டாராம்.

ஏனென்றால் ஹாலிவுட் படத்தில் நடிக்க சென்றால் வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது என்று அவர்கள் நினைப்பார்கள். அதனால் வாடிவாசலை ஆரம்பித்துவிட்டால் பழைய ப்ராஜெக்ட் என்று சொல்லி கிடைக்கிற கேப்பில் நடித்து விடலாம் என்பது சூர்யாவின் திட்டம். வெற்றிமாறனும் அதற்கு ஓகே சொல்லி இருக்கிறார்.

அதன்படி மார்ச் மாதத்தில் ஒரு பத்து நாள் ஷூட்டிங் வைத்துக் கொள்ளவும் ப்ளான் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அது அமீர், சூர்யா இருவருக்கும் இடையேயான காட்சிகளாம். அந்த பத்து நாட்களும் அவர்கள் இருவரும் இணைந்து நடித்தே ஆக வேண்டும்.

Also read: நல்லான் வகுத்ததா நீதி இங்கே வல்லான் வகுத்ததே நீதி.. 17 வருட வலியை கொட்டிய பருத்திவீரன் அமீர்

இதை கேள்விப்பட்ட சூர்யா இது என்னடா புது வம்பா இருக்கு என பலத்த யோசனையில் இருக்கிறாராம். இதனால் வாடிவாசல் மீண்டும் அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஒரு வேலை சூர்யா இதற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால் மீண்டும் வாடிவாசல் தள்ளிப் போகும் நிலையும் ஏற்படலாம்.

Trending News