ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வைஷ்ணவியுடன் சங்கீத் ஃபங்ஷனை கொண்டாடும் வெற்றி வசந்த்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

Vijay Tv: சின்னத்திரை நாயகனாக விஜய் டிவி மூலம் ஜொலித்து வரும் கதாநாயகன் வெற்றி வசந்த், சிறகடிக்கும் ஆசை சீரியலில் முத்து என்ற கேரக்டர் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். இதுதான் இவருடைய முதல் சீரியல் என்றாலும் இதன் மூலம் இவருக்கு மக்களிடம் பேராதரவு கிடைத்திருக்கிறது.

அதே மாதிரி சீரியலில் கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக நடித்து வந்த வைஷ்ணவி பொன்னி என்ற சீரியல் மூலம் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த சமயத்தில் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி இருவரும் காதலிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

vettri vasanth vaishanavi
vettri vasanth vaishanavi

இவர்களுடைய காதலை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து வருகிற 28ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் கல்யாணம் சென்னையில் வைத்து நடைபெற போகிறது. ஆனால் அதற்கு முன் நேற்று இரவு வைஷ்ணவியுடன் சங்கீத் ஃபங்ஷனை வெற்றி வசந்த் கொண்டாடி இருக்கிறார்.

vettri vasanth vaishanavi (1)
vettri vasanth vaishanavi (1)

இந்த பங்க்ஷனில் முத்துவின் சீரியல் நண்பர்களும் பொன்னியின் நண்பர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து விழாவை சிறப்பிக்கும் வகையில் பொன்னி சீரியலில் வைஷ்ணவியின் கணவராக நடித்து வரும் சக்தி தொகுத்து வழங்கி இருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது.

Trending News