வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

நடிகர்களை மாட்டி விட இணைய கூலிப்படைகள் செய்யும் வேலை.. மாபியா கேங் ஆக மாற்றப்படும் வெற்றிமாறன் விஜய் சேதுபதி

Vetrimaaran and Vijay Sethupathi are get stuck the work done by internet mercenaries:  சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி பசுத்தோல் போர்த்திய புலியாக விஷமிகள் பலர் உலா வருகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் மக்களுடன் மக்களாக பயணித்து சில தேசத் துரோக செயல்களிலும், சமூகத்திற்கு எதிரான அராஜகங்களிலும் ஈடுபடுகின்றனர். அவ்வாறு இருந்தவர்தான் மங்கை பட தயாரிப்பாளர் 

 பெண்ணை மையப்படுத்திய வித்தியாசமான கதை அம்சத்தில் கயல் ஆனந்தி நடித்திருக்கும் திரைப்படம் மங்கை. குபேரன் காமாட்சி இயக்கத்தில் ஆனந்தியுடன் ஈசன் பட புகழ் துஷி, ஆதித்யா போன்றோரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். பெண்ணின் பயணம் பற்றியும், அவள் சந்திக்கும் பிரச்சனைகள், மேலும் பெண்மீதான ஆணின் கண்ணோட்டம் போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக மங்கை இருக்கும் என  இயக்குனர் குபேரன் காமாட்சி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி அன்று மங்கை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை  தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருடன் இணைந்து அமீர், வெற்றிமாறன், விஜய் சேதுபதி முதலானோர் வெளியிட்டனர். தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் இப்படத்தை தவிர அமீரின் “இறைவன் மிகப் பெரியவன்” என்ற படத்தையும் வசந்த் ரவி நடிக்கும் இந்திரா என்றும் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்.

Also read: வாடிவாசலை விட்டுக் கொடுத்த சூர்யா.. ராயனை களம் இறக்கும் வெற்றிமாறன்!

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட வெற்றிமாறனின் கதையை அமீர் தானாக முன்வந்து இந்த படத்தை  இயக்கட்டுமா என அனுமதி பெற்று உருவாக்கும் திரைப்படமே இறைவன் மிகப்பெரியவன்.  யுவன் சங்கர் ராஜா இசையில் சூரி மற்றும் ஆர்யாவின் தம்பி சத்யா முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று உள்ளனர்.

தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் மீது போதை பொருள் கடத்தல் வழக்கு பதியப்பட்டு இருப்பதால் திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது. சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ள இவர்களுடன் சேர்ந்து ஒருபோதும் பணியாற்ற மாட்டேன் என்று அறிக்கை விட்டார் அமீர்.

வெற்றிமாறன் கதை எழுதிய படத்தை இவர் தயாரிக்கிறார் என்பதாலும், தயாரிப்பாளரின் ஹோட்டலை  திறந்து வைத்ததாலும் விஜய் சேதுபதி மற்றும் வெற்றி மாறனை டீலர்கள் என சம்பந்தப்படுத்தி இணைய கூலிப்படைகள் இவர்களை நாச வேலைகளில் சித்தரித்து வருகின்றனர்.  நல்லவர்கள் யார்  தீயவர்கள் யார் என  கண்டு பழக முடியதனால் வந்த விளைவை அனுபவிக்கின்றனர் நம் பிரபலங்கள்.

Also read : வெற்றிமாறனை பார்த்து ஆரம்பத்தில் நிராகரித்த நடிகர்கள்.. பத்து வருஷம் சினிமாக்காக தியாகம் செய்த இருவர்

Trending News