பொதுவாகவே வெற்றிமாறன் அவ்வளவு எளிதில் கோபப்படமாட்டார். ஆனால் வெற்றிமாறன் அவரும் கோபப்பட்டு ஒரு நிகழ்ச்சியில் இருந்து கிளம்பிச் சென்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக கருதப்படும் வெற்றிமாறன் படம் இயக்குவதை தவிர்த்து அவ்வப்போது நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் சங்கத் தலைவன்.
சமுத்திரக்கனி நடித்துள்ள இந்த படத்தின் விழா ஒன்றில் வெற்றிமாறன் கோபப்பட்டு மேடையை விட்டு இறங்கிச் சென்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்குக் காரணம் மேடையில் அமர்ந்திருந்த சக நடிகர் மாரிமுத்து தான்.
படத்தைப் பற்றி பேசுகிறேன் என படத்தை பற்றி அனைத்தையும் கூறி மேலும் தேவையில்லாத அரசியல் பிரச்சனைகளையும் பேசியுள்ளார் நடிகர் மாரிமுத்து. அரசியல் சார்ந்த கருத்துக்களையும் அவர் தெரிவித்துள்ளததால் வெற்றிமாறன் அதிர்ச்சியாகிவிட்டாரம்.
இதனால் கடுப்பான வெற்றிமாறன் உடனடியாக அவரிடமிருந்து மைக்கைப் பிடுங்கி விட்டாராம். தயவு செய்து நீங்கள் பேசவேண்டாம் என்று கூறிவிட்டு மேடையை விட்டு கோவமாக இறங்கிச் சென்று விட்டாராம். தான் தயாரித்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியிலேயே வெற்றிமாறன் இப்படி கோவப்பட்டு சென்றுள்ள செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னமும் அந்த நடிகரின் மீது வெற்றிமாறன் கோபத்தில் இருப்பதாகத்தான் தெரிகிறது. எப்படியும் அலுவலகத்திற்கு அழைத்து திட்டி தீர்த்து விடுவார் என்கிறார்கள் அவரது வட்டாரங்கள். கஷ்டப்பட்டு படம் தயாரித்து வெளியிட சென்றால் தேவையில்லாத கருத்துக்களைப் பேசி படத்துக்கு ஆப்பு வைக்க பார்த்த அந்த நடிகரை சும்மா விடுவாரா.