தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்திலும் வித்தியாசமான கதைகளை மையமாகக் கொண்டு இருக்கும் அதனால் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
இப்படத்திற்காக வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது. தமிழ்சினிமாவில் குறிப்பிட்ட இயக்குனர்கள் மட்டுமே பொழுதுபோக்கான படங்களை இயக்காமல் சமுதாயத்தில் கருத்துக்கள் சொல்லக்கூடிய படங்களை இயக்குவார்கள் அதில் வெற்றிமாறன் படத்திற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
வெற்றிமாறன் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷ் மற்றும் சென்றாயன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். தனுஷின் திரைவாழ்க்கையில் பொல்லாதவன் படம் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. இப்படத்திற்கு பிறகுதான் தனுஷிற்கு அதிரடியான சண்டைக் காட்சிகள் அடுத்தடுத்த படங்களில் வைக்கப்பட்டது.
இப்படத்தில் தனுஷை பார்த்து சென்றாயன் பேசும் வசனம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனை சென்றாயன் தான் பேசியுள்ளார் என இத்தனை நாட்கள் ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் படத்தில் இடம்பெற்ற வசனத்தை சென்றாயன் பேசவில்லை அவருக்கு பதிலாக வெற்றிமாறன் டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.
இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அது மட்டுமில்லாமல் ஒரு சில நடிகர்களுக்கும் வெற்றிமாறன் டப்பிங் குரல் கொடுத்துள்ளார். தற்போது வெற்றிமாறன் சூரி வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தற்போது நல்ல எதிர்பார்ப்பு நிலவி உள்ளதால் கூடிய விரைவில் படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
முதல் முறையாக ஒரு காமெடி நடிகரை வைத்து இயக்கி வரும் வெற்றிமாறனின் இந்த புதிய முயற்சி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.