ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விடுதலை 2 ஆடியோ வெளியீட்டு விழாவில் கோபமாக பேச்சை நிறுத்திய வெற்றிமாறன்.. ஷாக்கான இளையராஜா, என்னவா இருக்கும்?

Vetrimaaran: இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை பட ஆடியோ வெளியீட்டு விழாவில் மேடையிலேயே கோபப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. வெற்றிமாறனின் ஆகச் சிறந்த படைப்புகளில் தற்போது விடுதலை படமும் இணைந்து இருக்கிறது.

சூரியை ஹீரோவாக மற்ற இயக்குனர்கள் பார்க்கும் அளவுக்கு மாற்றியது இயக்குனர் வெற்றிமாறன் தான். முதல் பாகம் முழுக்க சூரி ஆக்கிரமித்து இருப்பார். தற்போது இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க விஜய் சேதுபதியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பதாக தெரிகிறது.

கோபமாக பேச்சை நிறுத்திய வெற்றிமாறன்

படத்தின் டிரைலர் வெளியான நிலையில் நேற்று ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா இந்த நிகழ்ச்சியின் கலந்து கொண்டார். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ரொம்ப கூலாக இளையராஜா இந்த மேடையில் பேசினார்.

அதுவும் நடிகர் சூரியை தன்னுடைய கேலி கிண்டலால் சீண்டியது ரொம்பவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் விழாவுக்கு திருஷ்டி பொட்டாக அமைந்துவிட்டது இயக்குனர் வெற்றிமாறனின் கோபம். வெற்றிமாறன் மேடையில் தன்னுடைய பட குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார்.

குறிப்பிட்டு யாருடைய பெயரையும் சொல்லாமல் பொத்தாம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவர் மேடை ஏறி அவரிடம் படகு குழுவின் பெயரை சொல்லும்படி கேட்டு இருப்பார்கள் போல. அது வெற்றிமாறனை ரொம்பவும் அப்செட் ஆக்கி இருக்கிறது.

ஏன்டா டீம் என்றாலே எல்லோருமே வந்துட்டீங்களே அப்புறம் எதுக்குடா என்று சொல்றீங்க அப்படின்னு கேட்கிறார். அதன் பின்னர் அவரால் பேச முடியாமல் மைக்கை வைத்து விட்டு கிளம்பி விடுகிறார். இது இளையராஜாவுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது.

வடிவேலு சொன்ன மாதிரி நம்மள விட கோபக்காரனா இருப்பானோ என்று பார்க்கிறார். உடனே இளையராஜாவிடமும் நடிகர் விஜய் சேதுபதி இடமும் தன்னுடைய கோபம் எதற்கானது என விளக்கும் படியாக பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோவுக்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஒவ்வொரு படம் வெற்றியின் போதும் உங்களுடைய பெயர் அதுவாகவே புகழ்பெற்று விடும். ஆனால் உங்கள் குழுவில் இருப்பவர்களின் பெயரை மேடையில் சொல்வது அவர்களுடைய அடுத்த பாதைக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.

Trending News