வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எல்லா படங்களிலும் வெற்றிமாறன் கைவிடாது தூக்கி பிடித்த நடிகர்.. இன்று வரை பெயரை காப்பாற்றி கொள்ளும் ஜாம்பவான்

வெற்றிமாறன் தனித்துவமாக படம் அமைப்பதில் வல்லவர். இவரின் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று நிறைய ஹீரோக்கள் இயங்கி வருகின்றனர். அப்படி வெற்றிமாறன் கைவிடாது தூக்கிப் பிடிக்கும் நடிகர் ஒருவர் இருக்கிறார்.

அவர்தான் சகலகலா வல்லவன் கிஷோர் குமார். பொல்லாதவன், வடசென்னை, ஆடுகளம், விசாரணை என பல படங்களில் நடித்தவர். தனுஷின் பொல்லாதவன் படத்தில் வில்லனாக இருப்பவருக்குள்ளும் ஒரு விதமான நல்லவன் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை காட்டும் கேரக்டரில் கிஷோர் குமார் நடித்திருப்பார். இவரால்தான் அந்த படத்தின் முழு கதையும் நகரும்.

Also Read: தமிழ் படத்தில் இடம் பிடித்த மிரட்டலான 4 ஆங்கில பாடல்கள்.. ஆடுகளத்தில் ஆட்டம் போட்ட தனுஷ்

அதேபோல் ஆடுகளம் படத்தில் துரை என்ற கேரக்டரில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இந்தப் படத்தில் துரையாக கிஷோர் குமாருக்கு சமுத்திரகனி குரல் கொடுத்திருப்பார். அதேபோல வடசென்னை படத்திலும் செந்தில் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இவரை தான் தனுஷ் கூட இருந்தே குழிப்பறிப்பார்.

ஒரு கட்டத்தில் செந்திலை தனுஷ் தாக்கி விடுவார். அதன் பிறகு வீல் சேரில் முடங்கிப் போன செந்திலின் நடிப்பு அல்டிமேட் ஆக இருக்கும். இதில் கிஷோர் நிஜமாகவே வெற்றிமாறனை இந்த படத்தில் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே கூடுதலாக உழைத்து இருப்பார். அது திரையில் கண்கூடாக பார்க்க முடியும்.

Also Read: வெற்றிமாறன் படத்தில் அடம் பிடித்து நடித்த 5 இயக்குனர்கள்.. வட சென்னையில் மிரட்டி விட்ட ராஜன்

இதே போல வெற்றிமாறனின் விசாரணை படத்திலும் கிஷோர் குமார் ஆடிட்டராக நடித்து அசத்து இருப்பார். இவ்வாறு தான் நடிக்கும் வெற்றிமாறன் படங்களில் கொடுக்கப்படும் கேரக்டரில் கனக்கச்சிதமாக நடித்து வெற்றிமாறனின் படங்களில் தன்னுடைய பெயரை காப்பாற்றிக் கொண்ட ஜாம்பவான் தான் கிஷோர் குமார்.

இவர் இன்றுவரை முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்காவிட்டாலும், துணை நடிகராக நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் இவரை வெகு சீக்கிரமே அடையாளம் கண்டு கொள்ள முடியும். கிஷோர் என்றால் ரசிகர்களுக்கு யார் என்று தெரியாவிட்டாலும் இவரை திரையில் பார்த்ததும் சட்டென ஒரு பூரிப்பு ரசிகர்களின் முகத்தில் தோன்றிவிடும். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் மட்டுமே ரசிகர்களை வசியம் செய்து வைத்திருக்கிறார்.

Also Read: வெற்றிமாறனின் ஆச்சரியமூட்டும் 5 அவதாரங்கள்.. வெப் சீரிஸ்க்கு கதை எழுதிய பொல்லாதவன்

Trending News