வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிரபல நடிகரின் படத்தை ஐபோனில் எடுக்கும் வெற்றிமாறன்.. கண்கலங்கிய தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் வெற்றிமாறன் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார். இவரது படத்தை பாராட்டுவதற்கு தமிழ் சினிமாவில் ஒரு கூட்டமே உள்ளது. ஏனென்றால் அந்த அளவிற்கு தனது திறமையின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ளார் வெற்றிமாறன்.

இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் தேசிய அளவில் பல விருதுகளை வாங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிமாறன் இயக்கிய படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது. இவர் இயக்கிய ஆடுகளம், பொல்லாதவன் மற்றும் சமீபத்தில் வெளியான அசுரன் ஆகிய படங்கள் அனைத்துமே தமிழ் சினிமாவின் மறக்க முடியாத படங்களில் இடம் பிடித்துள்ளது.

வெற்றிமாறன் எப்போதுமே கிராமத்து கதையை மையமாக வைத்து படம் எடுப்பார். தற்போது பிரபல காமெடி நடிகர் சூரி வைத்து ஜெயமோகனின் துணைவன் எனும் நாவலை மையமாக வைத்து படத்தை எடுத்து வருகிறார்.

தனது படங்கள் அனைத்தும் கேமராவில் எடுத்த வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து எடுக்கும் துணைவன் படத்தை மட்டும் ஐ போனில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

soori
soori

எதற்காக இந்த வித்தியாசமான முயற்சி என்றால் தயாரிப்பாளர்களின் செலவை குறைப்பதற்காகவும் அதுமட்டுமில்லாமல் மொபைல் போன் மூலம் படம் எடுக்கும் போது அதிகமான பொருட் செலவு எதுவும் செலவாகாது என்பதற்காகவும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இனியாவது வெற்றிமாறன் போல் தயாரிப்பாளர்கள் மீது அக்கறை காட்டி இந்த மாதிரி வித்தியாசமான முறையில் படத்தை எடுப்பார்களா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Trending News