புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விடுதலை 2-ம் பாகத்தின் ஹீரோ சூரி இல்லையாம்.. வியாபாரத்திற்காக வெற்றிமாறன் போட்ட பெரிய பிளான்

இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சூரி விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. அதில் சூரி வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் படத்தை பார்க்கும் ஆர்வத்தையும் தூண்டியது.

அந்த வகையில் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சூரி தான் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் இரண்டாம் பாகத்தில் அவர் ஹீரோ கிடையாது கிடையாதாம். அதாவது முதலில் விடுதலை திரைப்படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் தான் எடுக்கப்படுவதாக தான் இருந்தது. அதிலும் தயாரிப்பாளர் நான்கு கோடி பட்ஜெட்டை மட்டுமே இதற்காக ஒதுக்கி இருந்தார்.

Also read: நம்ப வச்சு ஏமாற்றிய வெற்றிமாறன்.. மேடையில் சிரிச்சுக்கிட்டே அசிங்கப்படுத்திய விஜய் சேதுபதி

ஆனால் விஜய் சேதுபதியின் வரவு ஒட்டுமொத்த பட்ஜெட்டையும் தலைகீழாக மாற்றி இருக்கிறது. ஏனென்றால் வெறும் கெஸ்ட் ரோலில் நடிக்க வந்த விஜய் சேதுபதி 10 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். இதனால் படத்தின் பட்ஜெட்டும் எக்குதப்பாக உயர்ந்து இருக்கிறது. மேலும் படமும் இரண்டு பாகங்களாக எடுக்கும் நிலைக்கு சென்று இருக்கிறது.

அதற்கேற்றார் போல் வெற்றிமாறனும் விஜய் சேதுபதியை வைத்து நன்றாக வேலை வாங்கி விட்டார். தற்போது படமும் ரிலீசுக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. அந்த வகையில் இரண்டாம் பாகமும் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்குமாம். ஆனால் அதில் சூரியை விட விஜய் சேதுபதிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Also read: ஆயிரக்கணக்கான பாடல்களில் இது தனித்து நிற்கும்.. மாத்தி மாத்தி புகழ்ந்து தள்ளிய வெற்றிமாறன், இளையராஜா

அதாவது முதல் பாகம் முழுக்க முழுக்க சூரியை வைத்து நகர்ந்தாலும் இரண்டாம் பாகத்தில் ஸ்கோர் செய்யப்போவது என்னவோ விஜய் சேதுபதி தான். இதை வைத்து தான் தற்போது படத்தின் வியாபாரமும் படுஜோராக நடைபெற்று வருகிறது. ஏனென்றால் இது சூரியின் படம் என்றால் வியாபாரம் ஆவது கொஞ்சம் கஷ்டம் தான். அதனாலேயே வெற்றிமாறன் ஒரு ராஜதந்திரத்தை கையாண்டு உள்ளார்.

அதன்படி இதை விஜய் சேதுபதியின் படமாகவே விளம்பரப்படுத்தி வியாபாரம் செய்து இருக்கின்றனர். அவர்கள் போட்ட பிளான் படி படத்தின் பிசினஸும் சூடு பிடித்துள்ளது. இதுதான் விடுதலை திரைப்படத்தில் இருக்கும் மிகப்பெரிய சீக்ரெட். அந்த வகையில் வெற்றி மாறனின் இந்த வியாபார யுக்தி பலரையும் வியக்க வைத்துள்ளது.

Also read: தன் இனத்தை காப்பாற்ற போராடும் விஜய் சேதுபதி வாத்தியார்.. வெற்றிமாறனின் விடுதலை பார்ட் ஒன் ட்ரெய்லர்

Trending News