வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மொத்த கதையை மாற்றிய வெற்றிமாறன்.. வெளிவருவதற்கு முன் சூரி படத்தில் வெடித்த புதிய பிரச்சனை

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சங்களை வைத்து வெற்றி படங்களை கொடுக்க கூடியவர் வெற்றிமாறன். இவர் பெயருக்கு ஏற்றது போலவே பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனுசு பெரிய அளவில் வெற்றி அடைவதற்கும், பெயர் வாங்குவதற்கும் வெற்றிமாறனும் ஒரு முக்கிய காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆடுகளம் படத்தின் மூலம் ஒரு தேசிய விருதும் சமீபத்தில் வெளியான அசுரன் படத்தின் மூலம் ஒரு தேசிய விருது வாங்கிக் கொடுத்தார்.

ஆனால் வெற்றிமாறன் பெருந்தன்மையாக தனுஷ் விருது வாங்கியதற்கு அவருடைய திறமையும் ஒரு பக்கம் காரணம் என கூறினார்.

vetrimaran jeyamohan
vetrimaran jeyamohan

சமீபகாலமாக இயக்குனர்களுக்கும் சினிமாவில் இருக்கும் பிரபலங்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை வருவது வழக்கம்தான் அப்படி வெற்றிமாறன் மற்றும் ஜெயமோகனுக்கும் ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது.

தற்போது வெற்றிமாறன் சூரி வைத்து துணைவன் எனும் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு அப்பாவாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

ஆனால் ஜெயமோகன் எழுதியதை விட படத்தில் பல மாற்றங்களை வெற்றிமாறன் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் என அனைத்திலும் உங்கள் பெயரை போட்டுக்கொள்ளுங்கள் எனக்கு எந்த பெயரும் வேண்டாம் என கூறியுள்ளார்.

Trending News