சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தம்பி, நான்தான் டைரக்டர், நான்தான் அப்டேட் கொடுக்கணும்.. கசியவிட்ட பிரபலம் மீது அப்செட்டில் வெற்றிமாறன்

வெற்றிமாறன் அடுத்தடுத்து இயக்கும் படங்களின் அப்டேட்டை அவரை விட அவரது படத்தில் பணியாற்றும் பிரபலம் ஒருவர் தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கசிய விட்டு வருவது அவருக்கு வருத்தத்தை கொடுத்துள்ளதாம்.

தமிழ் சினிமாவில் இதுவரை தோல்வி கொடுக்காத இயக்குனர் என்ற பட்டத்துடன் வலம் வருகிறார் வெற்றிமாறன். அசுரன் படத்திற்கு கிடைத்த தேசிய விருதுக்கு பிறகு தெம்புடன் அடுத்தடுத்த படங்களில் பணியாற்றி வருகிறார்.

அந்த வகையில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இருவரையும் வைத்து விடுதலை எனும் படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. மேலும் இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் எனும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்பு வந்ததோடு சரி. அதன்பிறகு இப்படத்தைப் பற்றி எந்த ஒரு விஷயமும் வெளிவரவில்லை.

விடுதலை படத்தை முடித்த பிறகு வாடிவாசல் படத்தின் அப்டேட்களை ஒவ்வொன்றாக தெரிவிக்கலாம் என யோசித்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாடிவாசல் படத்தின் மியூசிக் வேலைகள் ஆரம்பித்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் ரசிகர் ஒருவர் வாடிவாசல் அப்டேட் கேட்டதற்கு, விரைவில் வரும் எனவும், நீங்கள் எதிர்பார்க்காத சில விஷயங்களும் நடக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைத்து விடும் என அப்செட்டில் உள்ளாராம் வெற்றிமாறன்.

gv-prakash-cinemapettai
gv-prakash-cinemapettai

Trending News