வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அடுத்த 7 வருஷத்துக்கு ரொம்ப பிஸி.. நிற்க நேரமில்லாமல் பறக்கும் வெற்றிமாறன், கைவசம் இருக்கும் 6 படங்கள்

Vetrimaaran: பெயருக்கேற்றார் போல் வெற்றியை மட்டுமே ருசித்துக் கொண்டிருக்கும் வெற்றிமாறன் தான் இப்போது கோலிவுட்டில் ரொம்பவும் பிசியான இயக்குனராக இருக்கிறார். அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர் இப்போது நிற்க கூட நேரமில்லாமல் பறந்து கொண்டிருக்கிறாராம்.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான விடுதலை நல்ல விமர்சனத்தை பெற்ற நிலையில் தற்போது இவர் அதன் இரண்டாம் பாகத்தில் பிஸியாக இருக்கிறார். ஏற்கனவே இதன் முக்கால்வாசி பட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது.

Also read: சூர்யாவை டீலில் விட்டாரா வெற்றிமாறன்.? வருஷ கணக்கில் காக்க வைத்த வாடிவாசல், எதிர்பாராத ஷாக்

இருப்பினும் சில காட்சிகளை தற்போது படமாக்கி வரும் வெற்றிமாறன் அடுத்த வருட தொடக்கத்தில் இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார். அதை அடுத்து ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த வாடிவாசல் தொடங்கப்பட இருக்கிறது.

இதற்காகவே பல பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கும் சூர்யா கங்குவா முடிந்த கையோடு இதில் பங்கேற்க இருக்கிறார். இதை அடுத்து வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் வடசென்னை 2 உருவாக இருக்கிறது. இந்தப் படத்திற்காக ரசிகர்களை காட்டிலும் தனுஷ் தான் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

Also read: அவதாருக்கே டஃப் கொடுக்க போகும் வெற்றிமாறன்.. உச்சகட்ட எதிர்பார்ப்பை எகிற வைத்த விடுதலை 2

இதற்கு அடுத்ததாக அற்புதம்மாள் என்ற வெப் சீரிஸும் வெற்றிமாறன் கைவசம் இருக்கிறது. ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த தொடர் 31 வருடங்களாக சிறையில் இருந்த தன் மகன் பேரறிவாளனை மீட்டு வந்த தாயின் வலி மிகுந்த கதையாகும்.

அதைத்தொடர்ந்து விஜய்யுடனும் வெற்றிமாறன் கூட்டணி அமைக்க இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக ஜூனியர் என்.டி.ஆரை வைத்தும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படி கைவசம் ஆறு படங்களை வைத்திருக்கும் வெற்றிமாறன் அடுத்த 7 வருடத்திற்கு ரொம்பவும் பிஸி என்ற நிலையில் இருக்கிறார்.

Also read: விஜய்யை மிரட்டி நடிக்க வைத்த சசிகலா.. 20 வருடங்களுக்கு முன் பணிந்து போன தளபதி

Trending News