வெள்ளிக்கிழமை, டிசம்பர் 20, 2024

மக்களின் குரலாக ஓங்கி ஒலித்ததா விடுதலை 2.? படம் எப்படி இருக்கு, ட்விட்டர் விமர்சனம்

Viduthalai 2: வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த விடுதலை நல்ல வரவேற்பை பெற்றது. அதை அடுத்து இன்று விடுதலை 2 ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ளது.

viduthalai 2
viduthalai 2

சூரி கதையின் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் கேரக்டரில் வாழ்ந்துள்ளார். மேலும் மஞ்சு வாரியர் இதுவரை இல்லாத அளவுக்கு கனமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

viduthalai 2
viduthalai 2

இதன் ட்ரைலரே வெறித்தனமாக இருந்தது. வசனங்கள் அதைவிட அனல் பறந்தது. அதனாலேயே படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.

viduthalai 2
viduthalai 2

இப்படி ஆரவாரங்களுக்கு மத்தியில் வெளிவந்துள்ள படம் எப்படி இருக்கிறது என ஆடியன்ஸ் சோசியல் மீடியாவில் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். அதில் அனைவரும் வெற்றிமாறனை புகழ்ந்து வருகின்றனர்.

viduthalai 2
viduthalai 2

முதல் முப்பது நிமிடங்கள் வேற லெவலில் இருக்கிறது. விஜய் சேதுபதி ஒட்டுமொத்த ஆடியன்ஸ் மனதையும் கவர்ந்து விட்டார். வசனத்தில் தொடங்கி ஆக்சன் காட்சிகள் வரை அனைத்துமே சிறப்பு.

viduthalai 2
viduthalai 2

படம் முழுவதும் புரட்சியாக தான் இருக்கிறது. இருந்தாலும் வெற்றிமாறனின் ஃபார்முலா ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது. அதேபோல் ரொமான்ஸ் காட்சியிலும் அவர் ஸ்கோர் செய்துள்ளார்.

விஜய் சேதுபதி மஞ்சுவாரியர் இடையே வரும் காட்சிகள் அழகாக காட்டப்பட்டிருக்கிறது. வன்முறை ரத்தம் என காட்சிகள் இருப்பதால் குடும்ப ஆடியன்ஸ் எந்த அளவுக்கு விரும்புவார்கள் என தெரியவில்லை.

ஆனால் மொத்தத்தில் படம் அல்டிமேட் என ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். இப்படி பாசிட்டிவ் விமர்சனங்கள் வரும் நிலையில் படத்தின் வசூல் எப்படி என விரைவில் தெரிந்து விடும்.

Trending News