புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வெற்றிமாறன் மனதில் இருந்து தூக்கி எறிந்த இரண்டாம் பாகம்.. காரணத்தைக் கேட்டு அதிர்ச்சியில் தனுஷ்

ஒரு வழியாக பல போராட்டத்திற்கு பின் விடுதலை இரண்டாம் பாகத்தை முடித்து விட்டார் வெற்றிமாறன். அடுத்தபடியாக வெற்றிமாறன் ரூட் கிளியர் ஆக இருக்கிறது என பல ஹீரோக்கள் நூல் விட்ட போதிலும் எதிலும் சிக்கவில்லை.. விடுதலை ரிலீஸுக்கு பின்னர் அவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படம் பண்ண இருக்கிறார்.

வாடிவாசல் படத்தை ட்ராப் செய்து விட்டனர் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டது. அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அமீர் நடிப்பதால் சூர்யா சற்று தயங்குகிறார், அதனால் இந்த படம் தொடராது எனக் கூறி வந்தனர். ஆனால் வெற்றிமாறன் அடுத்த படம் இதுதான் என உறுதியாக கூறிவிட்டார்.

இதற்கிடையில் தனுஷ், வெற்றிமாறனுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார். இவர்கள் கூட்டணியில் உருவான வடசென்னை படத்தில் இரண்டாம் பாகத்தை எப்படியாவது எடுத்தாக வேண்டும் என தனுஷ் ஒற்றை காலில் நின்றார்/. ஆனால் வெற்றிமாறன் தன் மனதில் பட்ட காயத்தால் இந்த படத்தை ஒதுக்கி விட்டார்.

எப்பொழுதுமே வெற்றிமாறன் எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காமல் கேரியரை கொண்டு செல்வார். ஆனால் அவரையும் சில பேர் காயப்படுத்தி விட்டார்கள். இவர் இயக்கிய வடசென்னை படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஆனால் அதன் பின் அவர் சந்தித்த அனுபவங்கள் தான் அவரை இந்த படத்தின் அடுத்த பாகத்தை தொடர விடாமல் செய்துள்ளது.

வடசென்னை மக்கள் அவரிடம், எங்கள் வாழ்க்கை முறைகளை தவறாக சித்தரிக்கிறீர்கள். இந்த ஏரியா மக்கள் இப்படித்தான் இருப்பார்கள், ரவுடிசம் செய்வார்கள், கோர்ட் கேஸ் என்று அழைப்பவர்கள் என வடசென்னை படத்தில் எங்களை தப்பாக காட்டி விட்டீர்கள் என வெற்றிமாறன் மனதை புண்படும்படி பேசி விட்டார்கள். அதனால் இனிமேல் மனதார வெற்றிமாறன் வடசென்னை இரண்டாம் பாகம் எடுக்க மாட்டார்.

Trending News