வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தனுஷை துன்புறுத்திய வெற்றிமாறன்.. உண்மையை போட்டுடைத்த பிரபலம்

இதுவரை தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்ததால் தொடர்ந்து, இவர்களது கூட்டணியில் வெளியாகும் படங்கள் ரசிகர்களை ஆர்வத்துடன் காக்க வைத்திருக்கிறது. இந்நிலையில் வெயில் சுட்டெரிக்கும் மாதத்தில் படமாக்கப்பட்ட அசுரன் படப்பிடிப்பில் தனுஷ் நடித்திருக்கும் ஒரு காட்சி, படத்தை பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

அதை திரையில் காண்பிப்பதற்காக வெற்றிமாறன் தனுஷை எப்படி துன்புறுத்தினார் என்பதை அந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில் உடைத்து பேசியிருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு படமாக்கிய அசுரன் திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை பெற்ற பெருமைக்குரிய படமாகும்.

Also Read: தமிழ் ராக்கர்ஸை ஆட்டம் காண வைத்த தனுஷ்.. சிக்காமல் சிட்டாய் பறக்கும் நானே வருவேன்

இந்தப் படத்தில் தனுஷ் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் தனுஷ் தன்னுடைய மகனுக்காக வீடுவீடாக சென்று தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து மன்னிப்பு கேட்கும்படி ஒரு சீன் வைக்கப்பட்டிருக்கும்.

இந்த சீன் எடுக்கும்போது அந்த மாதம் வெயில் சுட்டெரிக்கும் காலமாக இருந்தது. அந்தக் காட்சி படமாக்கப்படும் போது அந்த தெரு முழுவதும் ஒரு மரம் கூட கிடையாது. கட்டாந்தரையில், தனுஷ் படுத்து விழுவதுபோல் எடுக்கும் கஷ்டமான காட்சியை வெற்றிமாறன் படமாக்கினார்.

Also Read: திட்டம் போட்டு வலை விரித்த தயாரிப்பாளர்.. சரியான நேரம் பார்த்து எஸ்கேப் ஆன தனுஷ்

ஆனால் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.போர்வையை தெரு முழுவதும் விரித்துவிடலாம், அதில் விழுந்து வணங்குங்கள் என்று தனுஷிடம் தெரிவித்தார்களாம். ஆனால் அதற்கு தனுஷ் மறுத்துவிட்டாராம். மூன்று கேமிராக்களை வைத்து ஒரே ஷாட்டில் அந்தக் காட்சியை எடுத்து முடித்தார்கள்.

அந்த சமயம் வெற்றிமாறனுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தும், இதை தனுஷிடமும் தெரிவிக்க முடியவில்லை. இதுதான் படத்திற்கான முக்கியமான கட்டம். படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக தனுசுக்கு துன்பத்தை கொடுத்து விட்டோமே என்ற கவலை இருந்தது, அதையெல்லாம் தாங்கிக்கொண்டு ஒரு நடிகன் தன்னையே என்னிடம் ஒப்படைத்த போது எனக்கு மெய்சிலிர்த்தது.

Also Read: ஏற்றிவிட்ட ஏணியை உதாசீனப்படுத்திய சிவகார்த்திகேயன்.. கொந்தளிக்கும் தனுஷ் ரசிகர்கள்

மற்ற எந்த நடிகர்களும் இவரைப் போன்று செய்ய மாட்டார்கள். அதனால்தான் தனுசுடன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று வெற்றிமாறன் தயாரிப்பாளருடன் அசுரன் படத்தில் இடம்பெற்ற அந்தக் காட்சி குறித்து மனம்திறந்து பேசினாராம்.

அதை இப்போது தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி எப்படிப்பட்டது என்பதை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் 2007 ஆம் ஆண்டு முதல் முதன்முதலாக இணைந்து அதன் பிறகு ஆடுகளம், அசுரன் போன்ற படங்கள் வரிசையாக தேசிய விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News